SuperTopAds

வடமாகாணத்தின் குடிநீா் பிரச்சினை தொடா்பான ஆளுநா் தலமையில் விசேட கலந்துரையாடல்..

ஆசிரியர் - Editor I
வடமாகாணத்தின் குடிநீா் பிரச்சினை தொடா்பான ஆளுநா் தலமையில் விசேட கலந்துரையாடல்..

வடமாகாணத்தில் குடிநீர்பிரச்சினையை எதிர்நோக்கும் கிராமங்களுக்கு நிரந்தர தீர்வொன்றினை வழங்குவதற்காக வடமாகாண ஆளுநர் தலைமையில் கூட்டமொன்று நேற்று (08.12.2018) நடைபெற்றது. 

இதில் வடமாகாண நீர்பாசன திணைக்கள பணிப்பாளர் பிறேம்குமார், வடமாகாண விவசாய அமைச்சின் செயலர் தெய்வேந்திரன், பிரதி பிரதம செயலாளர் பொறியியல் சேவை சண்முகாணந்தன் திட்டப்பணிப்பாளர் 

பொறியியலாளர் சுதாகரன் உதவி கமநலசேவைகள் பணிப்பாளர் சிவானந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.  வடமாகாணத்தில் மக்களின் நீர் தேவையினை பூர்த்தி செய்வதற்காக ஆரம்பிக்கப்படவுள்ள திட்டங்கள் 

தொடர்பில் அதிகாரிகள் ஆளுநருக்கு தெளிவு படுத்தினர். குறிப்பாக கடல் நீரை நன்நீர் ஆக்கும் திட்டம் குளங்களை புனரமைத்து மழை நீரை சேமித்து நிலத்தடி நீரை பாதுகாக்கும் செயல்திட்டம் 

யாழ்ப்பாணத்தின் குடிநீர் தேவைக்காக இரணைமடு அல்லது பாலியாறு போன்றவற்றினை பயன்படுத்துவ தொடர்பிலும் பேசப்பட்டது.  இதன்போது கருத்து தெரிவித்த ஆளுநர் நீர்பாசனத்திணைக்களம் மக்களுக்கான சுத்தமான குடிநீரினை 

வழங்கின்றபோதும் மக்கள் அதனை சிக்கனமாக பயன்படுத்துவதில்லை என்பதை நான் இங்கே கண்டிருக்கின்றேன். அவர்கள் தமது வளப்பு பிராணியை குளிக்க வார்ப்பதற்கும் வாகனங்களை கழுவுவதற்கும் வீடுகள் மற்றும் பூக்கன்றுகளுக்கும் குடிநீரை 

பயன்படுத்துவதை நான் அவதானித்து இருக்கின்றேன். இதற்கு மாற்று திட்டம் ஒன்றினை ஏற்படுத்த வேண்டியது கட்டாயமானது. அதற்காக நன்நீர் தட்டுப்பாடாக காணப்படும் பிரதேசங்களை அண்டிய பகுதியில் காணப்படும் நன்நீர் ஏரிகளை பயன்படுத்தி குடிநீர் 

தவிர்ந்த வேறு தேவைக்கு உரிய நீரினை வழங்குவதற்கான செயற்திட்டம் ஒன்றினை அமைப்பதற்கு எண்ணியிருப்பதாக தெரிவித்தார். அதற்கான வரைபுகளை ஆராய்யுமாறு அதிகாரிகளிடத்தில் அவர் கேட்டுக்கொண்டார்.