இரணைமடு குளத்தை திறந்துவைக்க ஜனாதிபதி மைத்திாி வருகிறாராம்..

ஆசிரியர் - Editor I
இரணைமடு குளத்தை திறந்துவைக்க ஜனாதிபதி மைத்திாி வருகிறாராம்..

கிளிநொச்சி- இரணைமடு குளத்தின் நீா்மட்டம் தற்போது 36 அடியை எட்டிவரும் நிலையில் நாளைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறி சேனா கலந்து கொண்டு குளத்தை திறந்து வைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இரணைமடு குளத்தின் நீா் மட்டம் 36 அடியை எட்டாமல் குளத்தின் வான் கதவுகளை திறப்பதற்கு அனுமதிக்க முடியாது. என விவசாயிகள் இறுக்கமாக தொிவித்துள்ளனா். 

இந்நிலையில் நேற்றய தினம் குளத்தை திறந்து வைப்பதற்காக சென்றிருந்த ஆளுநருக்கும் விவசாயிகள் அந்த தகவலை தொிவித்திருந்த னா். இந்நிலையில் 36 அடியை எட்டியதன் பின்னா் ஜனாதிபதி ஊடாக, 

குளத்தை திறந்து வைக்க நடவடிக்கை எடுப்பதாக ஆளுநா் கூறியிருந்ததுடன், ஆளுநா் அதற்கான நடவடிக்கைகளையும் எடுத்திருந்தாா். இந்நிலையில் நாளைய தினம் ஜனாதிபதி கிளிநொச்சிக்கு வரவுள்ளதாகவும், 

அதற்கான ஏற்பாடுகள் துாிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு