யாழ்.போதனா வைத்தியசாலையில் சீாிஸ் ஸ்கானா் பழுது.. வெளிமாவட்டங்களுக்கு அனுப்பபடும் நோயாளா்கள்.

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலையில் சீாிஸ் ஸ்கானா் பழுது.. வெளிமாவட்டங்களுக்கு அனுப்பபடும் நோயாளா்கள்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இயங்கிய சீ.ரி ஸ்கானர் பழுதின் காரணமாக நோயாளர்கள் வவுனியா உள்ளிட்ட வெளிமாவட்ட வைத்தியசாலைகளிற்கு அனுப்பப்படுவதாக நோயாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

யாழ். குடாநாட்டில் இயங்கும் 30 வைத்தியசாலைகளிற்கும் பொதுவாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மட்டுமே சீ.ரி.ஸ்கானர் உள்ள நிலையில் குறித்த ஸ்கானர் கடந்த 20 தினங்களாக பழுதடைந்த நிலையில் உள்ளது. 

இதன் காரணமாக மாவட்டத்தின் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்படும் நிலையில் 

அங்கிருந்தும் வெளி மாவட்டங்களிற்கே அனுப்பி வைக்கப்படுகின்ற நிலமையை கருத்தில்கொண்டு உடன் நடவடிக்கை எடுக்குமாறு கோருகின்றனர்.

குறித்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தியிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது ,

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உள்ள ஸ்கானரும் 8 ஆண்டுகள் பழமையானது. அதேநேரம் போதனா வைத்தியசாலையின் பயன் பாட்டிற்கு இரண்டு ஸ்கானர் தேவையானபோதிலும் 

ஒரேயொரு ஸ்கானர் மட்டுமே உள்ளது. இவ்வாறுள்ள ஸ்கானரில் நாள் ஒன்றிற்கு 60 ஸ்கானிங் இடம்பெறுகின்றது. இவற்றின் காரணமாக மேற்படி நிலமை ஏற்பட்டுள்ளது. 

இருப்பினும் குறித்த ஸ்கானர் சீர் செய்ய ஆவண செய்யப்பட்டுள்ளது. என்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு