ஒரே நாளில் வெளியான இரண்டு வீடியோக்கள்: டிரெண்டில் ரஜினிமயம்

ஆசிரியர் - Admin

இன்று மாலை 6 மணிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படத்தின் சிங்கிள் பாடலான 'மரணமாஸ் தலைவர் குத்து' பாடல் வெளியாகி இணையதளங்களை வைரலாக்கியதோடு டிரெண்டிலும் உள்ளது.

இந்த நிலையில் சற்றுமுன் ரஜினியின் '2.0' திரைப்படத்தின் சினிக்பீக் வீடியோ ஒன்றை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் நம்பர் 1, நம்பர் 2 என்பது பாப்பா விளையாட்டு, எப்போதும் ஒன்லி ஒன், சூப்பர் ஒன் நான் தான்' என்று ரஜினி பேசும் வசனம் இந்த வீடியோவில் உள்ளது.

இவ்வாறு ஒரே நாளில் ரஜினியின் இரண்டு வீடியோக்கள் வெளிவந்துள்ளதால் டுவிட்டர் டிரெண்டில் 'பேட்ட'. மரணமாஸ், 2.0சினீக்பீக், ரஜினிகாந்த், லைகா என ஒரே ரஜினி மயமாக உள்ளது.

Radio
×