வெறும் வயிற்றில் இவற்றை சாப்பிடுங்கள்.. இவ்வளவு நன்மைகளா?

ஆசிரியர் - Editor I
வெறும் வயிற்றில் இவற்றை சாப்பிடுங்கள்.. இவ்வளவு நன்மைகளா?

அனைவருக்குமே தேனின் நன்மைகள் மற்றும் அதன் மருத்துவ குணங்கள் பற்றி நன்கு தெரியும். அதிலும் தேன், உடலில் வரும் பிரச்சனைகளான இருமல், தொண்டைப் புண் போன்றவற்றை குணமாக்கவும், சருமத்தில் பருக்கள், கரும்புள்ளிகள் இல்லாமல் அழகாக வைப்பதற்கும், உடல் எடையை விரைவில் ஆரோக்கியமான முறையில் குறைப்பதற்கும் பெரிதும் உதவுகிறது.

அதுமட்டுமின்றி, நாம் இதுவரை செயற்கை முறையில் தயாரித்த சர்க்கரையைத் தான் அனைத்து உணவுப் பொருட்களிலும் சேர்த்து சாப்பிடுகிறோம்.

ஆகவே அந்த உணவுப் பொருட்களில் சர்க்கரைக்கு பதிலாக, தேனை சேர்த்து சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

ஆனால் முக்கியமாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தேனைப் பற்றிய ஒரு உண்மை என்னவென்றால், தேன் ஆரோக்கியமான ஒன்று தான். அதற்காக அதனை தவறான முறையில் சாப்பிட்டால், அது உடல் எடையை அளவுக்கு அதிகமாக்குவதோடு, நீரிழிவு உள்ளவர்களுக்கு இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்து விடும்.

வெறும் வயிற்றில் தேன் சாப்பிடுவதிலும் பார்க்க நீருடன் பருகுவது சிறந்தது.

வெதுவெதுப்பான நீரில்

வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் தேனை கலந்து, தினமும் காலையில் எழுந்ததும் குடித்து வந்தால், உடலில் உள்ள கொழுப்புக்கள் கரைவதோடு, செரிமானம் அதிகரித்து, அமிலச் சேர்க்கையைத் தடுத்துவிடும்.

எலுமிச்சை ஜூஸ்

பொதுவாக எலுமிச்சை ஜூஸ் உடன் சர்க்கரையைத் தான் சேர்த்து குடிப்போம். ஆனால் அதில் சர்க்கரைக்கு பதிலாக தேனை கலந்து குடித்து வந்தால், உடல் எடை குறையும்.

டீ

சர்க்கரையை சேர்த்து சாப்பிடும் பானங்களுள் டீயும் ஒன்று. எனவே அத்தகைய டீயில் சர்க்கரையை சேர்ப்பதற்கு பதிலாக தேனை சேர்த்து குடிக்கலாம். அதிலும் ப்ளாக் டீக்கு பதிலாக க்ரீன் டீயில் கலந்து குடிப்பது, அதை விட மிகவும் சிறந்தது.

சாலட்

டயட்டில் சாலட் சாப்பிடுபவர்களாக இருந்தால், அதன் மேல் சிறிது தேனையும் கலந்து சாப்பிடலாம். ஆனால் பழங்களால் செய்யும் சாலட்களில் தேனை சேர்க்க வேண்டாம். ஏனென்றால், அதில் இயற்கையாகவே சர்க்கரை இருக்கும்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு