ஒதியமலை படுகொலையில் 34ம் ஆண்டு நினைவேந்தலும், நினைவுதுாபி திறப்பு நிகழ்கும் உணா்வுபூா்வமாக இடம்பெற்றது..

ஆசிரியர் - Editor I
ஒதியமலை படுகொலையில் 34ம் ஆண்டு நினைவேந்தலும், நினைவுதுாபி திறப்பு நிகழ்கும் உணா்வுபூா்வமாக இடம்பெற்றது..


அப்பாவித்தமிழ்மக்கள் முப்பத்திருவர் கடந்த 1984.12.02 அன்று மிலேச்சத்தனமான முறையில் ஒதியமலைப் பகுதியில் வைத்து படுகொலை செய்யப்பட்டனர்.  அந்த படுகொலை நாளினுடைய நினைவுதினம் ஆண்டு தோறும் திசம்பர் மாதம் இரண்டாம் திகதி நினைவு கூரப்படுகிறது.

அந்த வகையில் இவ்வாண்டும் 2018.12.02 ஆகிய இன்றையநாளில் குறித்த படுகொலைநாளின் முப்பத்து நான்காம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் உணர்வமைதியுடன் நடைபெற்றன. இந்த நினைவுநாள் நிகழ்விலே பெருந்திரளான தமிழ் உறவுகள் உணர்வமைதியோடு கலந்து கொண்டிருந்தனர். 

மேலும்  முன்னாள் கிராம அபிவிருத்தி சங்க தலைவர்  கந்தசாமி  தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறீற்கந்தராசா, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா - ரவிகரன் , ப.சத்தியலிங்கம், லிங்கநாதன் ஒட்டுசுட்டான் பிரதேச சபை உறுப்பினர் சத்தியசீலன், 

நெடுங்கேணி பிரதேச சபை உறுப்பினர்களான ஜெயசுதாகர், செந்தூரன் கரைதுறைப்பறு பிரதேச சபை உறுப்பினர் சி.லோகேசுவரன், முன்னாள் ஒதியமலை கிராம அலுவலர் வி.அருளானந்தம், ஒதியமலை கிராம அபிவிருத்தி சங்க தலைவர் இ.கிரிதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு