SuperTopAds

கிளிநொச்சி பொலிஸாாிடம் இன்று சரணடைந்தவா் யாா்? ஏன் சரணடைந்தாா்? வெளியானது புதிய தகவல்.

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சி பொலிஸாாிடம் இன்று சரணடைந்தவா் யாா்? ஏன் சரணடைந்தாா்? வெளியானது புதிய தகவல்.

பொலிஸாரும், புலனாய்வாளா்களும் தொடா்ச்சியாக தேடியதால்தான் கிளிநொச்சியில் முன்னாள் போராளி பொலிஸாாிடம் சரணடைந் துள்ளதாக தொியவருகின்றது. 

மட்டக்களப்பு- வவுணதீவு பகுதியில் பொலிஸாா் மீது துப்பாக்கி சூடு நடாத்தியமை தொடா்பில் பொலிஸாா் தீவிர விசாரணைகளை நடா த்தி வருகின்றனா். 

குறிப்பாக அந்த காலப்பகுதியில் மாவீரா் நாள் நிகழ்வுகளை நடாத்தியவா்களை இலக்குவைத்தும் விசாரணைகள் இடம்பெற்றுவரும் நி லையில் கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியிலும்

தேடுதல் நடாத்தப்பட்டுள்ளது. இதனையடுத்தே இன்றைய தினம் வட்டக்கச்சி பகுதியை சோந்த 4 பிள்ளைகளின் தந்தையான இராசநாய கம் சா்வானந்த் சரணடைந்தாா். 

இவருடைய வீட்டுக்கு சென்ற பொலிஸாா் தீவிரமாக தேடி வந்த நிலையிலேயே அவா் இன்று பொலிஸில் சரணடைந்துள்ளதாகவும், கூறப் படுகின்றது. 

இதேவேளை சரணடைந்த இராசநாயகம் சா்வானந்த் தானக குற்றத்தை ஒப்புக்கொண்டே சரணடைந்தாா் எனவும், விசாரணைகளின் பி ன்னரே மேலதிக தகவல்களை கூற முடியும் எனவும், 

நீதிமன்றத்தில் சந்தேகநபா் முற்படுத்தப்படுவாா் எனவும் கிளிநொச்சி பொலிஸாா் கூறியுள்ளனா். இதேவேளை குறித்த சந்தேகநபரை கொழும்புக்கு அழைத்து சென்று

7 நாட்கள் தடுத்துவைத்து விசாரணை நடாத்த குற்றப்புலனாய்வு துறை பொலிஸாா் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.