காண்பாா்வை இழந்த முன்னாள் போராளிகள் ஆளுநா் றெஜினோல்ட் கூரேயை சந்தித்தனா்..

ஆசிரியர் - Editor I
காண்பாா்வை இழந்த முன்னாள் போராளிகள் ஆளுநா் றெஜினோல்ட் கூரேயை சந்தித்தனா்..

யுத்தத்தில் கண்பார்வை இழந்த முன்னாள் போராளிகள் ஆளுநர் றெஜினோல்ட் குரேயை சுண்டுக்குளியில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் சந்தித்து நேற்று  கலந்துரையாடியுள்ளனர். 

அரசாங்க வேலைக்கான ஆட்சேர்ப்பின்போது 3சதவீதமானவர்கள் மாற்றுத்திறனாளிகள் இணைத்துக் கொள்ளப்பட வேண்டிய கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

அதன் பிரகாரம் தம்மையும்  அரச வேலைவாய்ப்புக்களில் இணைத்துக்கொள்ளுமாறு ஆளுநரிடம் வேண்டிக்கொண்டனர்.  குறிப்பாக கரைச்சி பிரதேசசபை நூலகம் மற்றும் வவுனியா நகரசபை நூலகங்களில் தம்மை போன்றவர்களுக்கான விசேட பகுதிகள் 

அமைக்கப்பட்டுள்ளபோதும் அது பயன்படுத்தப்படாது மூடி வைக்கப்பட்டிருப்பதாக கூறிய அவர்கள் அதில் தம்மை பணிக்கு அமர்த்துமாறு வேண்டிக்கொண்டனர். 

அதற்கான பயிற்ச்சிகளை தாம் எடுத்துள்ளதாகவும் அதனை தம்மால் திறம்பட செய்ய முடியும் எனவும் குறிப்பிட்டனர்.  இதுபோன்று யாழ் பல்கலைக்கழகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான பயிச்சி வகுப்புக்கள் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக 

தாம் அறிவதாகவும் அதில் பயிற்ச்சியாளர்களாக  செயற்படக்கூடிய வகையில் சிறப்பு தன்மைகளை தாம் கொண்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். 

இவர்களின் கோரிக்கையினை செவி மடுத்த ஆளுநர் நிச்சயமாக நீங்கள் குறிப்பிட்ட நிறுவனங்களுடன் தொடர்பினை ஏற்படுத்தி தகவல்களை திரட்டி வெற்றிடத்திற்கு உங்களை போன்றவர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்தார். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு