3 கோடி 20 லட்சம் ரூபாய் நிதியை மாகாணசபையின் அனுமதி இல்லாமல் செலவிட்ட முன்னாள் அமைச்சா் அனந்தியின் அமைச்சு..

ஆசிரியர் - Editor I
3 கோடி 20 லட்சம் ரூபாய் நிதியை மாகாணசபையின் அனுமதி இல்லாமல் செலவிட்ட முன்னாள் அமைச்சா் அனந்தியின் அமைச்சு..

வடமாகாண ஆளுநரின் வைப்பிலிருந்து மாகாண கூட்டுறவு மற்றும் மகளீர் விவகார அமைச் சுக்கு வழங்கப்பட்ட 3 கோடியே 20 லட்சம் ரூபாய் நிதி மாகாணசபையின் அங்கீகாரம் இல்லாமல் செலவிடப்பட்டமை தொடர்பில் விசாரணை நடாத்துமாறு அவைதலைவர் சீ.வி.கே.சி வஞானம் ஆளுநர் றெஜினோல்ட் கூரேக்கு கடிதம் மூலம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

இது குறித்து அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானத்துடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, வடமாகாணசபை உருவாவதற்கு முன்னர் அப்போதைய ஆளுநரின் வைப்பில் இருந்த 3 கோடி யே 20 லட்சம் ரூபாய் நிதி என்னால் அடையாளம் காணப்பட்டு அந்த நிதியை பெற்று மா காண கூட்டுறவு அமைச்சிடம் வழங்கப்பட்டு விசேடமாக போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு

அந்த நிதியை சபையின் அனுமதியுடன் வழங்குமாறு கூறப்பட்டது. அவ்வாறு சபையின் அனுமதியுடன் வழங்குமாறு கூறப்பட்டமைக்கு காரணம் குறித்த 3 கோடியே 20 லட்சம் ரூபா ய் நிதி மாகாணசபையின் வரவு செலவு திட்டத்திற்குள் உள்ளடக்கப்பட்ட நிதி அல்ல. ஆக வே சட்டரீதியாக மாகாணசபையின் அனுமதி அல்லது அங்கீகாரம் பெறவேண்டிய தேவை நிச்சயமாக இருந்தது. 

அதற்கமைய சபையின் அங்கீகாரம் பெறவேண்டும் என்பதை அமைச்சர் சபையும், பிரதம செயலாளரும் கூட சிபார்சு செய்துள்ளனர். ஆக மொத்தத்தில் சபை, அமை ச்சர் சபை, பிரதம செயலாளர் ஆகியோர் சபையின் அங்கீகாரத்துடனேயே நிதி செலவீடு செய் யப்படவேண்டும் என்பதையும், தெரிவு செய்யப்படும் பயனாளிகளுக்கான அங்கிகாரத்தையும் 

சபை வழங்கவேண்டும் என்பதையும் கூறியுள்ளது. இவ்வாறான நிலையில் சபையின் அங்கீகா ரம் பெறாமல் அமைச்சர் சபை அங்கீகரித்தது என கூறிக்கொண்டு 3 கோடியே 20 லட்சம் ரூபாய் நிதியை கூட்டுறவு அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன் கூட்டுறவு திணைக்களத்திற் கு விடுவித்த நிலையில் அந்த நிதி கிராமிய வங்கி ஊடாக செலவிடப்பட்டுள்ளது. ஆகவே நி

தி செலவுக்கான அங்கீகாரமும், பயனாளிகளுக்கான அங்கீகாரமும் சபையில் பெறப்படவில்i ல. மேலும் கூட்டுறவு அமைச்சர், அமைச்சின் செயலாளர், மற்றும் கூட்டுறவு திணைக்களம் ஆகியவற்றுக்கு சட்டரீதியாக சபையின் அங்கீகாரம் பெறப்படவேண்டும். என்பது நன்றாக தெ ரிந்திருந்தும் சட்டத்திற்கு முரணாக நிதி செலவிடப்பட்டமை தொடர்பில் உரிய விசாரணைகi

ள நடாத்துமாறு கடந்த சில தினங்களுக்கு முன்னர் வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூ ரேக்கு எழுத்துமூலம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளேன். அதனடிப்படையில் ஆளுநர் உரிய மேல் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அறிகிறேன் என்றார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு