யாழில் உலாவும் பேய்கள்? கலக்கத்தில் வியாபரிகள்….

ஆசிரியர் - Editor II
யாழில் உலாவும் பேய்கள்? கலக்கத்தில் வியாபரிகள்….

யாழ்.மாநகர சபையினால் புதிதாக அமைத்துக்கொடுக்கப்பட்ட சிற்றங்காடி கடைத்தொகுதியில் அமானுசிய சக்தி உலாவுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

யாழ்.நகர் பகுதியில் முனியப்பர் வீதியில் வியாபர நிலையங்களை அமைந்து வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த வியாபாரிகளுக்கு யாழ்,மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள காணியில் புதிதாக சிற்றங்காடி கடைத்தொகுதி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் யாழ்.மாநகர சபையினால் அமைத்து கொடுக்கப்பட்டது.

தற்போது குறித்த சிற்றங்காடி கடைத்தொகுதியிலையே வியாபாரிகள் வியாபர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்நிலையில் குறித்த கடை தொகுதிகளில் இரவு வேளைகளில் அமானுசிய சக்திகள் உலாவுகின்றன என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

அது தொடர்பில் தெரியவருவதாவது, “கடந்த 1995ஆம் ஆண்டுக்கு முன்னரான கால பகுதியில் சுடுகாடாக காணப்பட்டது. பின்னர் இராணுவ கட்டுப்பாட்டில் நீண்ட காலமாக இருந்து வந்தது. நீண்ட காலத்திற்கு பின்னர் இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறி இருந்தனர்.

இந்த காணியில் ஒரு இந்து ஆலயம் உள்ளது அந்த ஆலயமும் நீண்ட காலமாக பராமரிக்கப்படாமல் இருந்து வருகின்றன.இந்த நிலையில் தான் இரவு வேளைகளில் அமானுசிய சக்திகள் இந்த பகுதிகளில் உலாவி அட்டகாசம் புரிகின்றன.

இந்த கடை தொகுதி திறக்கபட்டு மூன்று மாத காலமாகி விட்டன. இந்த மூன்று மாத கால பகுதியில் இங்கு வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த 02 தமிழ் வியாபாரிகள் , 02 முஸ்லீம் வியாபாரிகள், மூன்று வியாபரிகளின் மனைவிமார், வியாபரி ஒருவரின் மாமனார் மற்றும் வியாபாரி ஒருவரின் தாய் ஆகிய ஒன்பது பேர் திடீரென நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளனர். அதற்கு காரணம் இங்கு உலாவும் அமானுசிய சக்திகள் தான்.

இங்கு வியாபரிகள் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்ட பின்னரே அவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றன. அத்துடன் இங்கு வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் வியாபாரிகளும் நஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்த கடை தொகுதி கட்டப்படும் போது , உரிய முறையில் சாந்தி செய்யாமையே அமானுசிய சக்திகள் உலாவ காரணம். தற்போது வியாபரிகள் ஒன்றிணைந்து சாந்தி செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றோம்.” என தெரிவித்தனர்.

அது தொடர்பில் மாநகர சபை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது , பேய் பிசாசு உலாவுகின்றது என்பது மூட நம்பிக்கை அத தேவையற்ற கட்டுக்கதை என தெரிவித்தார்

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு