சீ.வி.விக்னேஸ்வரனின் பாதுகாப்பு அதிரடியாக நீக்கம்.., மாவீரா்களுக்கு அஞ்சலி செலுத்துங்கள் என கூறியதன் எதிரொலியா?
வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் பொலிஸ் பாதுகாப்பு அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது.
நல்லூர் வீதியிலுள்ள அவரின் இல்லத்திற்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பும் உடனடியாக நீக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதலமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக விக்னேஸ்வரன், ஜனாதிபதிக்கும் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
மாவீரர் நாளையொட்டி இவரால் வெளியிடப்பட்டிருந்த அறிக்கை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
இந்நிலையில் நேற்று மாலை மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெற்று 24 மணி நேரங்கள் கூட ஆகியிராத நிலைமையில் உடனடியாக அவரின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலைமையில் தற்போது திடீரென அவரின் பாதுகாப்புகள் அகற்றப்பட்டுள்ளமை பொது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் மக்களின் உரிமைகளுக்காக உயிர்நீத்த எமது விடுதலை வீரர்களை நினைவு கூறும் எமது மக்களின் உணர்வினை எந்த எதிர்ப்பினாலும் தகர்த்துவிட முடியாது என முன்னாள் வடக்கு முதல்வர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.