SuperTopAds

மாவீரர் நாள் நினைவேந்தலை ஒழுங்கமைப்பு செய்தவருடை வீடு அடித்து நொருக்கப்பட்டது..

ஆசிரியர் - Editor I
மாவீரர் நாள் நினைவேந்தலை ஒழுங்கமைப்பு செய்தவருடை வீடு அடித்து நொருக்கப்பட்டது..

பருத்திதுறையில் மாவீரர் நாள் நினைவை ஏற்பாடு செய்தவரின் வீடு இனந்தெரியாதோரால் அடித்து நொருக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் நாள் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் கடந்த பல நாட்களாகச் செய்யப்பட்டுவந்தது.  இதற்கு கடும் எதிர்ப்புகள் அச்சுறுத்தல்கள் மத்தியில் நேற்றைய தினம் மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெற்றிருந்தன.

குறிப்பாக பருத்தித்துறை சுப்பர் மடம் பகுதியில்மாவீரர் நாள் நிகழ்வைக்கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் அங்குசென்ற இனந்தெருயாதோர்நிகழ்வைக் கொண்டாடவேண்டாம் என்று தடுத்தும்அதனையும் மீறி கொண்டாடினால் பாரிய விளைவுகளைச் சந்திக்கநேரிடுமென்றும் மிரட்டியுள்ளனர். 

ஆயினும் நிகழ்வை நடாத்துவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு நிகழ்வு ஆரம்பமாவதற்கு சில மணி நேரங்கள்முன்பாக அங்கு சென்ற பொலிஸார் துப்பாக்கிமுனையில்அங்கிருந்தவர்களை மிரட்டிபொருட்களையும் அடித்துநொருக்கியிரைந்தனர்.

இவ்வாறு தொடர்ந்தும்அச்சுறுத்தல்கள்விடுக்கப்பட்டு குழப்பங்கள் ஏற்படுத்தப்பட்ட போதும் அவற்றையெல்லாம்தாண்டி  அப்பகுதி மக்கள் மாவீரர் நாள் நிகழ்வை கொண்டாடியிருந்தனர்.

இந் நிலையிலேயே குறித்த நிகழ்வை முன்னின்று ஏற்பாடு செய்தவருடைய வீட்டிற்கு நள்ளிரவு வேளைசென்ற இனந்தெரியாதகும்பல் அவரை வெளியேவருமாறு கும்பல் சிங்களமொழியில் அழைத்தபோதும் வீட்டில் அவர்கள் இல்லை என்பதால் வீட்டையும் அடித்து நொருக்கிவிட்டு சென்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.