ஆர்னோல்ட்டே மேயர் வேட்பாளர்: மாவை சேனாதிராஜா

ஆசிரியர் - Editor II
ஆர்னோல்ட்டே மேயர் வேட்பாளர்: மாவை சேனாதிராஜா

முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் யாழ். மாநகரசபைக்காக இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாக மேயர் பதவிக்கு களமிறங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா பண்டத்தரிப்பு எம்.ஜி.ஆர் முன்னேற்ற கழகத்தின் ஏற்பாட்டில் பண்டத்தரிப்பில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ். மாநகரசபையின் மேயர் பதவிக்கு தமிழரசுக் கட்சி சார்பில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் இம்மானுவேல் ஆர்னோல்ட் களமிறங்கியுள்ளார்.

இதற்காக அவர் தனது மாகாண சபை பதவியைக்கூட இராஜினாமா செய்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு