எங்கே..எங்கே.. ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள். கண்ணீரால் நிரம்பியது மாவீரா் நாள்..

ஆசிரியர் - Editor I
எங்கே..எங்கே.. ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள். கண்ணீரால் நிரம்பியது மாவீரா் நாள்..

எங்கே..எங்கே.. ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள். என மாவீரர் கல்லறைப் பாடல் ஒலிக்க வடகிழக்கு மாகாணங்களில் உள்ள சகல மாவீரர் துயிலும் இல்லங்களிலும் நேற்று மாவீரர் நாள் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக நடந்து முடிந்துள்ளது. 

பல தடைகளுக்கு மத்தியிலும் பெருமளவான மக்கள் துயிலும் இல்லங்களுக்கு சென்று அஞ்சலிகளை செலுத்தினார்கள். 2009ம் ஆண்டுக்கு பின்னர் 10வது மாவீரர் நாள் நினைவேந்தல் வடகிழக்கு மாகாணங்களில் நேற்று நடைபெற்று முடிந்துள்ளது. 

வடகிழக்கு மாகாணங்களில் உள்ள சகல மாவீரர் துயிலு ம் இல்லங்களும் திட்டமிட்டு அழிக்கப்பட்டதுடன், பல மாவீரர் துயிலும் இல்லங்களில் தற்போதும் இராணுவம் நிலைகொண்டுள்ளது. இந்நிலையில் மாவீரர் துயிலும் இல்லங்களிலும், துயிலும் இல்லங்களுக்கு வெளியேயும் இம்முறை மாவீரர் நாள் நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது. 

கோப்பாய் மாவீரா் துயிலும் இல்லம்..


கிளிநொச்சி- கனகபுரம் மாவீரா் துயிலும் இல்லம்..


வல்வெட்டித்துறை- தீருவில் வெளி..


இலங்கை தமிழரசு கட்சி அலுவலகம்...


யாழ்.பல்கலைக்கழகம்..




பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு