பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா திரில் வெற்றி
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைப்பெற்ற 3-வது டி20 போட்டியில் இந்தியா இறுதி ஓவரில் திரில் வெற்றி பெற்றது!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அணி 3 டி20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இன்று டி20 தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி சிட்னி மைதானத்தில் நடைப்பெற்று நடைப்பெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தி வந்த ஆஸி., அணி வீரர்கள் மலமலவென ரன்களை குவிக்கத்தொடங்கினர். ஆஸி., அணி வீரர்கள் ஆர்கி சார்ட் 33(29) ஆரோன் பின்ச் 28(23) ரன்களில் வெளியேற தொடர்ந்து களமிறங்கிய கெளன் மேக்ஸ்வெல் 13(16), அலெக்ஸ் கேரி 27(19) ரன்கள் குவித்தனர்.
இந்திய வீரர்களின் பந்துவீச்சினை தும்சம் செய்த ஆஸி. அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் குர்ணல் பாண்டயா 4 விக்கெட்டுகளை குவித்தார்.
இதனையடுத்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய வீரர்கள் களமிறங்கினர். தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் 23(16), ஷிகர் தவான் 41(22) ரன்கள் குவிக்க ஒன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய விராட் கோலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 61(41) குவித்தார்.
அவருக்கு துணையாக தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காமல் 22(18) ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்நிலையில் ஆட்டத்தின் 19.4-வது பந்தில் இந்திய வெற்றி இலக்கை எட்டி தொடரை சமன் செய்தது.