SuperTopAds

தேசிய தலைவாின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் தொடா்பில் செய்தி சேகாிக்க சென்ற ஊடகவியலாளா்களுக்கும் பொலிஸாா் அச்சுறுத்தல்..

ஆசிரியர் - Editor I
தேசிய தலைவாின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் தொடா்பில் செய்தி சேகாிக்க சென்ற ஊடகவியலாளா்களுக்கும் பொலிஸாா் அச்சுறுத்தல்..

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்விற்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியிலாளர்களுக்கு வல்வெட்டித்துறை பொலிஸார் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

தலைவர் பிரபாகரனின் 64 ஆவது பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வுகள்; பிரபாகரன் பிறந்த வல்வெட்டித்துறையிலுள்ள அவரது இல்லத்திலும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. ஆயினும் இந் நிகழ்விற்கு பொலிஸார் தடையேற்படுத்தியிருந்தனர்.

அதாவது நிகழ்வு ஒழுங்கமைப்பு பணியில் ஈடுபட்டவர்களின் அடையாள அட்டைகளைப் பறித்துச் சென்றதுடன் அவர்களையும் அங்கிருந்து வெளியேற்றியிருந்தனர். 

அதனைத் தொடர்ந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஐpலிங்கம் தலைமையில் கேக் வெட்டுவதற்கு முயற்சித்த போது அதனையும் பொலிஸார் தடுத்திருந்தனர்.

இதன் பின்னர் தீருவில் பொதுப் பூங்காவில் வைத்து கேக் வெட்ட முயற்சித்த போது அங்கு நின்றிரந்த சிவாஐpலிங்கம் மற்றும் அவரது சாரதி உள்ளிட்ட நான்குபேரையும் கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்றிருந்தனர். 

இதன் பின்னர் பிறந்தநாளுக்கு வெட்டுவதற்காக கொண்டு செல்லப்பட்ட கேக் உள்ளிட்ட பொருட்களைப் பறிமுதல் செய்து கைது செய்து செய்யப்பட்டவர்களை விடுவித்தனர்.

இதே வேளை இந் நிகழ்வு நடைபெறுவதை அறிந்து அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியிலாளர்களை அச்சுறுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டிருந்தனர்.

 குறிப்பாக அங்கு நின்றிரந்த ஊடகவியிலாளர்களை தமது கைத் தொலைபேசியில் தொடர்ந்தும் புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர். 

அத்தோடு அங்கு நின்றிருந்த வாகனங்களின் இலக்கங்களையும் தமது கைத் தொலை பேசிகளில் புகைப்படமெடுத்துக் கொண்டனர். 

இவ்வாறு அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியியலாளர்களை அச்சுறுத்தும் வகையில் பொலிஸார் செயற்பாடுகள் தொடர்பில் ஊடகவியியலாளர்களால் ஊடக அமைப்புக்களிடம்; தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.