தேசிய தலைவாின் வீட்டை துப்புரவு செய்தவா்களின் அடையாள அட்டைகள் பறிக்கப்பட்டதுடன், விசாரணைக்கும் அழைக்கப்பட்டுள்ளனா்..
தமிழீழ தேசிய தலைவா் மேதகு வே.பிரபாகரனின் 64வது பிறந்தநாள் நிகழ்வுகளுக்காக வல்வெட்டித்துறையில் உள்ள அ வருடைய வீட்டை துப்புரவு செய்ய ஏற்பாடு செய்தவா்களை வல்வெட்டித்துறை பொலிஸாா் விசாரணைகளுக்காக அழை த்துச் சென்றமையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு உருவானது.
தலைவர் பிரபாகரனின் 64 ஆவது பிறந்த நாள் இன்றாகும். இப் பிறந்த நாளை முன்னிட்டு வல்வெட்டித் துறையிலுள்ள அவரது இல்லத்திலும் பிறந்த நாள் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதற்காக அவரது காணி மற்றும் வீடு துப்பரவுப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் அங்கு வந்த பொலிஸாா் துப்புரவு பணிகளை செய்து கொண்டிருந்தவா்களின் அடையாள அட்டைகளை பறித்து சென்றுள்ளதுடன், பொலிஸ் நிலை யத்திற்கு வருமாறும் அழைத்துள்ளனா்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அத்தோடு அங்கு பொலிஸாரும் புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டிருக்கின்றமையால் பதற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.