SuperTopAds

தனது சொந்த நலனுக்காக தமிழ் மக்கள் பேரவையை கஜேந்திரகுமார் பயன்படுத்துகிறார்..

ஆசிரியர் - Editor I
தனது சொந்த நலனுக்காக தமிழ் மக்கள் பேரவையை கஜேந்திரகுமார் பயன்படுத்துகிறார்..

தனது சொந்த நலனிற்காகவும் தேர்தல் வெற்றிக்காகவும் மக்கள் இயக்கமான தமிழ் மக்கள் பேரவையை பயன்படுத்த துடிக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை பேரவையில் இருந்து வெளியேற்ற வேண்டும். என புளட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் மக்கள் பேரவையானது ஓர் மக்கள் இயக்கமே அன்றி அரசியல் கட்சியாக செயல்படமாட்டாது என்பதே அதற்கு ஆரம்பகால நிலைப்பாடு . இதனையே முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் ஆரம்பம் முதல் சொல்லி வந்தார். 

இருப்பினும் அதே முதல்வர் தற்போது ஓர் அரசியல் கட்சியை ஆரப்பித்த பின்பும் அதே இணைத்தலைவராகவே உள்ளமை போன்றே பல அரசியல் கட்சிகளும் பேரவையில் அங்கம் வகிக்கின்றோம்.

இவ்வாறு இருக்க கஜேந்திரகுமார் மட்டும் ஏதோ பேரவையை குத்தகைக்கு எடுத்தமை போன்று செயல்படகூடாது. செயல்படவும் முடியாது. அவ்வாறு செயல்பட தலமை இடம்கொடுக்கவும் கூடாது. 

அவ்வாறு நிகழ்ந்தால் பேரவை ஆரம்பிக்கப்பட்ட நோக்கம் மாறிவிடும். எனவே எம்மை பேரவையில் இருந்து வெளியேற்றும் உரிமை கஜேந்திரகுமாருக்கு கிடையாது.

இதன் காரணமாக இவ்வாறு எதேச்சையாகவும் பேரவையை சுய நலத்திற்காகவும் பயன்படுத்தும் கஜேந்திரகுமாரின் கட்சியை பேரவையில் இருந்து வெளியேற்ற வேண்டும். என்கின்ற ஓர் தீர்மானத்தினை நாம் அடுத்த பேரவையில் சமர்ப்பிக்கவுள்ளோம்.

இதனை பேரவை நியாயபூர்வமாக பக்கச் சார்பின்றி ஆராய்ந்து உரிய தீர்வினை முன்வைக்க வேண்டும். ஏனெனில் பேரவை ஆரம்பிக்கும்போது இருந்த அனைவருக்குப் அதில் அங்கம் வகிக்க உரிமை உண்டு. 

அதனைவிட அவர்களின் அரசியல் கட்சி போன்று இதனையும் குடும்ப சொந்தாக கருத முடியாது. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு தமிழ் மக்கள் பேரவையில் என்ன உரிமை இருக்கின்றதோ அதே அளவு உரிமை அதில் அங்கம் வகிக்கும் அனைவருக்கும் உண்டு. 

இருக்கவும் வேண்டும். அவ்வாறு இல்லையேல் அது மக்கள் இயக்கம் என்ற அந்தஸ்தை உழந்து விடும். அந்த வகையில் அடுத்த பேரவைக் கூட்டத்தில் இது தொடர்பான விடயங்களை முன்வைத்து நாம் தீர்வினைக் கோருவோம் அதற்கு கிடைக்கும் தீர்வினைப்பொறுத்தே நீதி வெளிப்படும். என்றார்.