நினைவுகூரலுக்கான தடையை எவரும் விதிக்க முடியாது. என்கிறார் து.ரவிகரன்..

ஆசிரியர் - Editor I
நினைவுகூரலுக்கான தடையை எவரும் விதிக்க முடியாது. என்கிறார் து.ரவிகரன்..

முல்லைத்தீவு மாவட்டத்தில் 7 இடங்களில் இம்முறை மாவீரர் நாள் நினைவேந்தல் இடம்பெறவுள்ளதாக கூறியிருக்கும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன், 

நினைவுகூரலுக்கான தடையை எவரும் விதிக்க முடியாது எனவும், மாவீரர்களுடைய பெற்றோர், உறவினர்க ள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொள்ளுமாறும் கேட்டுள்ளார்.

இது குறித்து ரவிகரன் நேற்று ஊடகங்களுக்கு தகவல் தருகையில், முல்லைத்தீவு மாவட்டத் தில் தேராவில், முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு நகர், அலம்பில், முள்ளியவளை, 

வன்னிவிளா ங்குளம், ஆலங்குளம் ஆகிய இடங்களில் மாவீரர் நாள் நினைவேந்தல் இடம்பெறவுள்ளது. இதற்கான ஆரம்ப பணிகளை பல்வேறு தரப்பினரும் மேற்கொண்டு வருகின்ற

னர். நாமும் ஒரு பகுதி மாவீரர் துயிலும் இல்லங்களை துப்புரவு செய்யும் பணிகளை மேற்கொண்டிருக்கிறோம். எனினும் முள்ளியவளை, அலம்பில், ஆலங்குளம் ஆகிய மாவீரர் துயிலும் 

இல்லங்கள் பூரணமாக விடுவிக்கப்படாமல் தொடர்ந்தும் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே இருந்து கொண்டிருக்கின்றது. எனினும் அந்த மாவீரர் துயிலும் இல்லங்களிலும் 

குறிப்பாக மாவீரர் துயிலும் இல்லத்திற்கு வெளியே என்றாலும் நினைவேந்தல் இடம்பெறும். மேலும் தமது பிள்ளைகளை, சகோதரர்களை, நண்பர்களை, 

உறவுகளை நினைவுகூருவதற்கு எவரும் தடைவிதிக்க முடியாது. எனவே மாவீரர்களின் பெற்றோர், சகோதரர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் எந்த தயக்கமும் இல்லாமல் நினைவேந்தலில்

 கலந்து கொள்ளுமாறு நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். அதேபோல் இராணுவத்தின் கட்டுப்பாட் டில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் இருந்து இராணுவம் வெளியேற்றப்படவேண்டும். 

அதற்கான அழுத்தங்களை தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசு க்கு வழங்க ஆவண செய்யவேண்டும் எனவும் ரவிகரன் மேலும் கூறியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு