SuperTopAds

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்களின் கரையோர மக்களுக்கு அவசர எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்களின் கரையோர மக்களுக்கு அவசர எச்சரிக்கை..

வங்கக் கடலில் காணப்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. என யாழ்.பல்கலைகழக பேராசிரியர் பிரதீபராஜா கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது,

தற்போது ( 20.11.2018 மாலை 5.00 மணி) முல்லைத்தீவுக்கும் கற்கோவளத்துக்கும் இடையில் முல்லைத்தீவிலிருந்து வடக்கே 109 கி. மீ. தூரத்தில் காணப்படுகின்றது. 

இது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 21.11.2018 இரவு அல்லது 22.11.2018 அதிகாலை இந்தியாவின் மகாபலிபுரம் அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனால் வடக்கு மாகாணம் முழுவதும் எதிர்வரும் 22.11.2018 வரை மழை தொடரும். சிலவேளை இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வேகமாக நகர்ந்தால் நாளை பிற்பகலுடன் மழை அற்றுப்போகலாம். 

கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகம் 40- 60 கி. மீ. வரை காணப்படலாம். கடற்பரப்பு கொந்தளிப்புடன் காணப்படும். அதனால் மீனவர்கள் மறு அறிவித்தல் வரை கடலுக்குள் செல்ல வேண்டாம். 

தொடர்மழை காரணமாக நவாந்துறை, பாசையூர், சாவற்காடு, பொம்மைவெளி, குருநகர் மற்றும் யாழ்.நகரை அண்மித்த கரையோரப் பகுதிகள் பாதிக்கப்படலாம். போதுமான முன்னேற்பாடுகள் அவசியமானவை.