கிளிநொச்சி மருத்துவமனைக்கு அதி நவீன அம்புலன்ஸ்!!
கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனைக்கு பென்ஸ் ரக அதிநவீன நோயாளர் காவு வண்டி கொழும்பு சுகாதார அமைச்சால் வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு சுகாதார அமைச்சால் நாட்டிலுள்ள மருத்துவமனைகளுக்கு அதிநவீன நோயாளர் காவு வண்டிகள் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றன.
வடக்கு மாகாண மருத்துவமனைகளுக்கும் அவை வழங்கப்பட்டு வருகின்றன. அண்மையில் பருத்தித்துறை ஆதார மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டிருந்தது.
கிளிநொச்சி மருத்துவ மனைக்கு அண்மையில் நியமிக்கப்ப ட்ட பணிப்பாளர் கடந்தவாரம் கொழும்பு சுகாதார அமைச்சுக்குச் சென்று உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.
அதன் பயனாக நேற்று இந்த நோயாளர் காவு வண்டி கிளிநொச்சி பொது மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.