சிரேஸ்ட ஊடகவியலாளர் கௌரவிப்பும், ஊடக அமையத்தின் 6ம் ஆண்டு வெற்றி பயணமும்..

ஆசிரியர் - Editor
சிரேஸ்ட ஊடகவியலாளர் கௌரவிப்பும், ஊடக அமையத்தின் 6ம் ஆண்டு வெற்றி பயணமும்..

யாழ்.ஊடக அமையத்தின் 6ஆம் ஆண்டு நிறைவு விழாவும், மூத்த ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வும் நேற்றைய தினம் ஞாயிற்றுக் கிழமை மாலை 6 மணிக்கு யாழில் உள்ள us விருந்தினர் விடுதி மண்டபத்தில் நடைபெற்றது.

யாழ்.ஊடக அமையத்தின் தலைவர் ஆ.சபேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் யாழில் நெருக்கடியாக சூழலில் அர்ப்பணிப்புடன் கடமையாற்றிய மூத்த ஊடகவியலாளர்களான ம.வ.கானமயில்நாதன், 

சண்முகராஜா யோகரட்ணம் (ராதேயன்), சின்னத்துரை தில்லைநாதன், ஆ.நா.சு.திருச்செல்வம், கந்தசாமி அரசரட்ணம், விநாயகம்பிள்ளை அற்புதானந்தன், மு.வாமதேவன், இளையதம்பி சற்குருநாதன்;, நா.யோகேந்திரநாதன் ஆகியோருக்கும் 

மற்றும் அமரர்களான அமரர்.சிதம்பரநாதன் திருச்செந்தில்நாதன், அமரர்.பொன்.பூலோகசிங்கம்; ஆகிய மூத்த ஊடகவியலாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.


Radio
×