வடமாகாண பாடசாலைகளில் நிலவும் காவலாளிகள் வெற்றிடத்தை நிரப்ப நடவடிக்கை..

ஆசிரியர் - Editor
வடமாகாண பாடசாலைகளில் நிலவும் காவலாளிகள் வெற்றிடத்தை நிரப்ப நடவடிக்கை..

வடக்கு மாகாணப் பாடசாலைகளில் நிலவும் காவலாளாகள் மற்றும் சுத்திகரிப்பாளர்கள்   பதவியில் காணப்படும் 159   வெற்றிடத்தினை நிரப்புவதற்கான ஆளுநரின்   அனுமதி  கிடைக்கப்பெற்று அடுத்த கட்ட நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்படுவதாக  வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார்.

வடக்கு மாகாணப் பாடசாலைகளில் காவலாளிகள் மற்றும் சுத்திகரிப்பாளர்கள் பதவிக்கான  வெற்றிடம் 159 காணப்படும் இடத்தில் இதுவரை அதனை நிரப்புவதற்கு மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பில் கேட்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் விபரம் தெரிவிக்கையில் , 

வடக்கு மாகாணப் பாடசாலைகளில் நிரவும் குறித்த வெற்றிடங்களை நிரப்புவமாயின் மாகாண சபையின் காலத்தில் அமைச்சரவையின் அங்கீகாரத்திற்காக இறுதிக் காலத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் குறித்த அனுமதி பெறமுடியாத காரணத்தினால் கடந்த வாரம் குறித்த அனுமதிக்காக ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. 

இதற்கான அனுமதி  உரிய முறையில் தற்போது கிடைத்துள்ளது. இதனையடுத்து இவர்களின் நியமனத்திற்காக முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் ஒப்புதலிற்காக அனுப்பி வைக்கப்படுகின்றது. குறித்த ஒப்புதலும் கிடைக்கப்பெற்றதும் ஜனவரி மாதம் விளம்பரம் கோருவதற்காக பொதுச் சேவைகள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்படும். என்றார். 

Radio
×