SuperTopAds

“காஜா” புயலினால் யாழ்.மாவட்டத்தில் 770 குடும்பங்கள் பாதிப்பு, 25 வீடுகள் பூரணமாக பாதிப்பு, 483 வீடுகள் பகுதியளவு சேதம்..

ஆசிரியர் - Editor I
“காஜா” புயலினால் யாழ்.மாவட்டத்தில் 770 குடும்பங்கள் பாதிப்பு, 25 வீடுகள் பூரணமாக பாதிப்பு, 483 வீடுகள் பகுதியளவு சேதம்..

யாழ்.குடாநாட்டில் “காஜா” புயல் எதிர்பார்த்த அளவுக்கு தாக்கத்தை உண்டாக்காதாபோதும் வடமாகாணத்தின் 5 மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

யாழ்.மாவட்டத்தில் 770 குடும்பங்களை சேர்ந்த 2793 பேர் புயலினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன். 25 வீடுகள் பூரணமாக சேதமடைந்துள்ளதுடன், 483 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

“காஜா” புயல் இலங்யையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த நிலையில் யாழ்.மாவட்டம் மட்டுமல்லாமல் வடமாகாணம் முழுவதும் பாரியளவு தாக்கத்தை உண்டாக்கும். என எதிர்பார்க்கப்பட்டது. 

இதனால் வடமாகாண மக்களுக்கு போதியளவு விழிப்புணர்வு கொடுக்கப்பட்டு பாதுகாப்பு ஒழுங்குகளும் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று இரவு 9 மணிக்கு பின்னராக யாழ்.மாவட்டத்தில் பலமான காற்று வீசியதுடன், கனமழையும் பெய்தது. 

இதேபோல் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களிலும் பலமான காற்று வீசியதுடன் மழையும் பெய்துள்ளது. இதனால் முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் கடல் மிகவும் கொந்தளிப்புடன் காணப்பட்டது. 

சுமார் 4 மீற்றர் உயரமான அலைகள் எழுந்ததைக் காணக்கூடியதாக இருந்தாக மக்கள் கூறுகின்றனர். இதேபோல் யாழ்.மாவட்டத்தில் சில இடங்களில் பாரிய மரங்கள் காற்றினால் விழுந் துள்ளது. குறிப்பாக அச்சுவேலி, 

நவாலி போன்ற பகுதிகளில் காற்றின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் மரங்கள் சரிந்து விழுந்துள்ளது. மேலும் நேற்றிரவு மாவட்டத்தின் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டது. எனினும் சில மணிநேரங்களில் மின்சாரம் மீண்டும் வந்தபோதும் 

சில இடங்களில் மின்சாரம் பகல்வேளையிலும் வரவில்லை. 

பாடசாலைகளுக்கு விடுமுறை..

“காஜா” புயல் தாக்கத்தினால் நேற்றய தினம் வடமாகாணத்தில் உள்ள சகல பாடசாலைகளு க்கும் நேற்றய தினம் விடுமுறை அறிவிக்கப்பட்டது. பாடசாலைகள் ஆரம்பமாகும் நேரம் காலை 7.30 மணியாக இருக்கும் நிலையில் காலை 8.30 மணிக்கே 

பாடசாலைகளுக்கான விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் பெருமளவு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலைக்கு சென்று பின்னர் திரும்பியுள்ளனர். 

கடல் உள்வாங்கியதால் பரபரப்பு..

நேற்று காலை ஊர்காவற்றுறை பகுதியில் திடீரென கடல் உள்வாங்கியதால் சுனாமி அனர்த்தம் உண்டாகலாம் என மக்கள் அச்சத்தில் உறைந்ததுடன், அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கும் தகவல் வழங்கியிருந்தனர். 

எனினும் உள்வாங்கிய கடல் மீண்டும் வழமைக்கு திரும்பியது. இதனால் எந்த ஆபத்தும் இல்ஐ ல. என அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்தது. 

தீவு பகுதிகளுக்கான போக்குவரத்து தடை..

காஜா புயல் தாக்கம் காரணமாக யாழ்.குடாநாட்டின் தீவு பகுதிகளில் கடல் மிகவும் கொந்தளி ப்பாக காணப்பட்டது. இதனால் தீவு பகுதிக்கான போக்குவரத்துக்கள் பூரணமாக முடங்கியது. குறிப்பாக அனலைதீவுக்கான போக்குவரத்து கடந்த 2 நாட்களாக தடைப்பட்ட நிலையில் 

ஊர்காவற்றுறை கண்ணகை அம்மன் இறங்குதுறையில் மக்கள் காத்திருப்பதை காணக்கூடியதாக இருந்தது. 

 770 குடும்பங்கள் பாதிப்பு..

காஜா புயல் காரணமாக யாழ்.மாவட்டத்தில் உண்டான பாதிப்புக்கள் குறித்து யாழ்.மாவட்டச் செயலர் என்.வேதநாயகன் கருத்து தெரிவிக்கையில், அனர்த்தம் ஒன்றை எதிர்கொள்வதற்கான பூரணமான முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. 

இதனால் பாரியளவில் சேதங்கள் குறைக்க ப்பட்டது. எனினும் 770 குடும்பங்களை சேர்ந்த 2793 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். மேலும் 25 வீடுகள் பூரணமாக சேதமடைந்துள்ளது. மேலும் 483 வீடுகள் பகுதியளவில் சே தமடைந்துள்ளன. 

மேலும் 57 சிறு கைதொழில் நிலையங்கள் சேதமடைந்துள்ளன. சாவகச்N சரி பிரதேசத்தில் 2 பாதுகாக்கப்பட்ட இடங்கள் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இங்கு 14 குடு ம்பங்களை சேர்ந்த 45 பேர் தங்கவைக்கப்பட்டனர். யாழ்.மாவட்டத்தில் தெல்லிப்பழை, 

சாவகச்சேரி, கோப்பாய் ஆகிய பகுதிகளில் அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். எனினும் எதிர்பார்த்தளவு பாதிப்பு இல்லை என கூறியுள்ளார்.