புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் கவனத்திற்கு!

மாங்குளம் பகுதியில் இரவு நேரங்களில் கட்டப்படாத கட்டாக்காலி மாடுகள் ஏ ஒன்பது வீதியின் நடுவே காணப்படுகின்றது.
இரவு நேரங்களில் மாடுகள் உரிமைாளர்களால் சாய்த்து பட்டிக்கு கொண்டு செல்லப்படவேண்டும் எனும் நியதி உண்டு. தற்போது காலபோக விதைப்பு காலமும் கூட இது தொடர்பாக இதுவரை ஏன் சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
தொடர்ச்சியாக இடம் பெறும் வீதி விபத்துக்களில் மாடுகளில் மோதுண்டு ஏற்படும் விபத்துக்கள் அதிகம் என்பதுடன் ஐந்தறிவு உயிரினங்கள் பல அண்மைக்காலமாக வீதிகளில் வாகனங்களில் அடிபட்டு இறப்பது தொடர்கதையாகிவிட்டது.
உடன் நடவடிக்கையெடுங்கள். வன்னியின் சுவையகத்திற்கு முன்னால் கூட்டமாக ஏ ஒன்பது வீதியில் நிற்கும் மாடுகள் இவை.