T20 World Cup - அவுஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் வெற்றி

ஆசிரியர் - Admin
T20 World Cup - அவுஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் வெற்றி

அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 139 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணியால் 9 விக்கெட் இழப்புக்கு 101 ஓட்டங்களே எடுக்க முடிந்தது. பாகிஸ்தான் அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். 

நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அவுஸ்திரேலியா 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

முதலில் விளையாடிய அவுஸ்திரேலியா 7 விக்கெட் இழப்புக்கு 153 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 17.3 ஓவரில் 120 ஓட்டங்களுக்குள் சுருண்டது. அவுஸ்திரேலியா 3-வது வெற்றியை பெற்றது. நியூசிலாந்து அணி தோல்வியை தழுவியது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு