SuperTopAds

வீதியில் கிடந்த தேக்கு மர குற்றிகளால் அச்சமடைந்த மக்கள்..

ஆசிரியர் - Editor I
வீதியில் கிடந்த தேக்கு மர குற்றிகளால் அச்சமடைந்த மக்கள்..

கிளிநொச்சியின் நகர்ப் பகுதியின் பல இடங்களிலும் தேக்கம் மரக் குற்றிகள் பல  நேற்று அதிகாலைவேளையில் பறிக்கப்பட்டிருந்தமையினால் பிரதேச மக்கள் மத்தியில் பெரும் பதற்றம் நிலவியது.

கிளிநொச்சி மாவட்டத்தின் புற நகர்ப் பகுதியான திருவையாறு கிராமத்தில் நேற்று அதிகாலை 5 மணியளவில் நான்கு சந்திகளில் தேக்கம் குற்றிகள் பறிக்கப்பட்டிருந்தன. 

இவ்வாறு பறிக்கப்பட்ட குற்றிகளை அதிகாலையில் வயலிற்குச் சென்றவர்கள் மற்றும் பணிக்குச் சென்றவர்கள் கண்டு அச்சம் கொண்டனர்.

தற்போது நாட்டில் ஆட்சி மாற்றம் மற்றும் பிரதமர் மாற்றத்தினால் கிராமந்தோறும் மீண்டும் இராணுவத்தினரின் காவலரன் அமைக்கும் முயற்சிக்காக ஒரு தொகுதி தேக்கம் மரக் குற்றிகளை 

ஏற்றி வந்து குறித்த பகுதிகளில் இறக்குவதாக மக்கள் மத்தியில் கதை உலாவியது. இதனால் பலரும் அச்சமடைந்திருந்தனர்.

எனினும் குறித்த தேக்கம் குற்றிகள் அதிகாலைவேளையில் ஓர் வாகனத்தில் கடத்தப்பட்டுள்ளது. அந்த சமயம் அப்பகுதியில் பொலிசாரின் பிரசன்னம் இருந்தமையை கடத்தல்காரர்கள் அவதானித்துள்ளனர். 

இவ்வாறு கடத்தப்பட்ட மரங்களை வாகனத்துடன் கைது செய்யப்பட்டால் சிறை செல்ல வேண்டிய நிலமை ஏற்படும் என அஞ்சி வாகனத்தில் இருந்த மரங்களக வீதிகளில் பறித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் வனவளத் திணைக்கள அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது , எமக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மரங்கள் மீட்கப்பட்ட அதேநேரம் குறித்த சம்பவம் தொடர்பில் 

கிளிநொச்சிப் பொலிசாருக்கு வழங்கிய தகவலின் பிரகாரம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்  . எனத் தெரிவித்தனர்.