இராணுவத்திடம் உள்ள காணிகள் குறித்த தரவுகள் மீளாய்வு செய்யப்படும்..
இராணுவத்திடம் உள்ள காணிகள் தொடர்பாக பிரதேச செயலகம் ஒரு தகவலையும், இராணுவம் இன்னொரு தகவலையும் வழங்குவதாக அறிகிறோம். ஆவை தொடர்பாக மீளாய்வு செய்வதுடன், கடற்படை, விமானப்படை, பொலிஸாரிடம் உள்ள காணிகள் தொடர்பாகவும் ஆராயப்படும்.
மேற்கண்டவாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார். போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீடு வழங்கும் நிகழ்வு இன்று யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் அவர் கூறுகையில், ஜனாதிபதியின் கருத்துப்படி இராணுவம், கடற்படை, விமானப்படை, மற்றும் பொலிஸாருடைய பயன்பாட்டிலுள்ள மக்களின் காணிகள், அரச காணிகள் குறித்து டிசம்பர் மாதம் 31ம் திகதிக்கு முன்னதாக தீர்வு காணவேண்டும்.
இதற்காக ஜனாதிபதி வடகிழக்கு மாகாணங்களின் ஆளுநர்களை அந்தந்த மாகாணங்களுக்கு பொறுப்பாக நியமித்துள்ளார். நான் ஒரு தகவல் அறிந்தேன் இராணுவத்திடம் உள்ள காணிகள் தொடர்பாக பிரதேச செயலகங்கள் வழங்கும் தரவுகளுக்கும்,
இராணுவம் வழங்கும் தரவுகளுக்கும் இடையில் பல வேறுபாடுகள் அல்லது முரண்பாடுகள் இருப்பதாக ஆளுநர் கூறியுள்ளதாக, எனவே அதனை மீளாய்வு செய்ய வேண்டியுள்ளது. மேலும் விமானப்படை, கடற்படை, மற்றும் பொலிஸாரின் ஆழுகைக்குள்
இருக்கும் காணிகள் தொடர்பாகவும் ஆராயவேண்டியுள்ளது. மேலும் விடுவிக்கப்படாத பகுதிகளில் உள்ள பாடசாலைகளை விடுவித்து அவற்றை புனரமைப்பு செய்யும்படி ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார் என்றார்.