இரணைமடு குளத்தின் நீா்மட்டம் 30 அடியை அண்மிக்கிறது.. வடமாகாணத்திலுள்ள பல குளங்களின் நீா் மட்டம் உயா்வு.

ஆசிரியர் - Editor I
இரணைமடு குளத்தின் நீா்மட்டம் 30 அடியை அண்மிக்கிறது.. வடமாகாணத்திலுள்ள பல குளங்களின் நீா் மட்டம் உயா்வு.

கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் நீர் 30 அடியை எட்டியுள்ளதாக மாவட்ட நீர்ப்பாசணத் திணைக்களப் பொறியியலாளர் பரணிதரன் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பெரிய குளங்களில் 9 குளங்கள் எமது ஆளுகையின் கீழ் உள்ளது. அவ்வாறு எமது ஆளுகையில் உள்ள குளங்கள் அனைத்திற்கும் தற்போது போதிய நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. 

இதனால் அடுத்த ஆண்டு சிறுபோகத்தையும் மேற்கொள்ளும் வாய்ப்பு கிட்டியுள்ளது. இதன் பிரகாரம் இரணைமடுக் குளம் தற்போது 29 அடியை அண்மித்து விட்டது. 

குறித்த நீர்மட்டம் அதிகாலையில் 30 அடியை நெருங்கும் அதேநேரம் மாவட்டத்தின் ஏனைய பெரிய குளங்களான கல்மடுக் குளம் , 

கனகாம்பிகைக் குளம் , வன்னேரி , பிரமந்தனாறுக் குளங்கள் வான்பாய்கின்றன. இதேநேரம் அக்கராயன் குளம் 21 அடியாகவும் , கரியாலைநாகபடுவான் குளம் 6 அடியாகவும் ,

 புதுமுறிப்புக் குளம்ங15.7 அடியாகவும் கானப்படுவதோடு குடமுறுட்டிக்குளம் 5.11 அடியாகவும் கானப்படுகின்றது.

இந்த வகையில் மாவட்டத்தின் கரியாலைநாகபடுவான் குளம் மற்றும் குடமுறுட்டிக் குளங்களிற்கான நீர்வரத்துப் பகுதிகளில் மட்டும் மழை வீழ்ச்சி சற்னு குறைவாக கானப்பட்டபோதும் 

ஏனைய பிரதேசங்களில் பிரதேசங்களில் போதிய மழை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதேபோன்று மன்னார் மாவட்டத்தின் மிகப் பெரும் குளமான கட்டுக்கரைக் குளம் அதன் கொள்அளவாக 11.5 அடியாக 

காணப்படுகின்றபோதும் தற்போது 11.8 அடியாக கானப்படுகின்றது.   முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகப் பெரும் குளமான வவுனிக்குளம் 18 அடியாகவும் 

முத்தையன்கட்டு குளம் 14.7 அடியாகவும் தண்ணிமுறிப்பு குளம் 21 அடியாகவும் காணப்படுவதோடு உடையார்கட்டுக் குளம் அதன் கொள்அளவான 23 அடியை தாண்டி வான் பாய்கின்றது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு