தீபாவளி தினத்தில் 3 விபத்துக்களில் 4 பேர் உயிரிழப்பு..

ஆசிரியர் - Editor
தீபாவளி தினத்தில் 3 விபத்துக்களில் 4 பேர் உயிரிழப்பு..

யாழில் தீபாவளி தினனத்தன்று இடம்பெற்ற மூன்று மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் நால்வர் உயிரிழந்துள்ளனர். 

யாழ்.கண்டி நெடுஞ்சாலையில் (A9) நேற்று இரவு 7 மணியளவில்  எரிபொருள் தாங்கி வாகனமும் மோட்டார் சைக்கிளிலும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் மோட்டார் சைக்கிளில் பயணிந்த கிளிநொச்சி செல்வ நகரை சேர்ந்த செ. கஜீபன் (வயது 18) மற்றும் கௌரீசன் தனுசன் (வயது 19) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர். 

அதேவேளை யாழ்.குப்பிளான் பகுதியில் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் வேகமாக பயணிந்த இளைஞன் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமாக இருந்த தூணுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியதில் அதே இடத்தை சேர்ந்த செ.நிரோசன் (வயது 20) எனும் இளைஞன் உயிரிழந்துள்ளார். 

அதேவேளை லான்ட்மாஸ்ரரும் மோட்டார் சைக்கிளும் நல்லூர் சங்கிலியன் வீதியில் மோதிக்கொண்ட விபத்தில் கோப்பாய் வடக்கை சேர்ந்த சி. தர்மசீலன் எனும் இளைஞன் உயிரிழந்துள்ளார். 

Radio
×