தமிழ் மக்களை ஏமாற்றி விட்டீர்கள்.. ஐனாதிபதிக்கு முன் சம்மந்தன் சாடல்..

ஆசிரியர் - Editor
தமிழ் மக்களை ஏமாற்றி விட்டீர்கள்.. ஐனாதிபதிக்கு முன் சம்மந்தன் சாடல்..

தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்குவீர்கள் என நம்பி வாக்களித்த மக்கள் இன்று கைவிடப்பட்ட நிலமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 

இதற்குரிய தீர்வு என்ன என ஜனாதிபதி முன்னிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்  இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

ஜனாதிபதி மாளிகையில் நேற்று  இடம்பெற்ற தீபாவளி நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்படி வினாவை தொடுத்திருந்தார்.

குறித்த நிகழ்வில் கூட்டமைப்பின் தலைவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் ,

தமிழ் மக்களின் வாழ்வில் புறையோடிப்போயுள்ள என்றுமே மாறாத வடுவாக உள்ள இந்த நாட்டில் நிலவும் பிரச்சணைக்கான தீர்வு தொடர்பில் தந்தை செல்வாவின் காலம் முதல் இன்றுவரை ஏமாற்றப்பட்டே வந்துள்ளனர். 

இந்த நாட்டை மாறி மாறி ஆண்ட ஆட்சியாளர்கள் வாக்குறுதிகளை வழங்கியபோதும் தீர்வை மட்டும் வழங்கவில்லை. அந்த நிலமையே தற்போதும் தொடர்கின்றது.

இந்த ஜனாதிபதியை தமிழ் மக்கள் முழுமையாக நம்பினார்கள் அதன் வெளிப்பாடாக இந்த ஜனாதிபதிக்கு முழுமையாக வாக்களித்தார்கள் இனப்பிரச்சணைக்கு தீர்வாக ஒருமித்த நாட்டிற்கும் தீர்வை கான இணங்கினார்கள். 

ஆனாலும் அவர்களிற்கான தீர்விற்கான அரசியல் அமைப்பு மட்டும் நிறைவேற்றப்படவே இல்லை. அதனை இந்த ஜனாதிபதி வழங்கியே தீரவேண்டும். என்றார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தனது உரையின்போது கூட்டமைப்பின் தலைவரின் உரைக்கு பதிலளிக்கும் வகையில் உரையாற்றினார்.

அதன்போது சம்பந்தன் கூறிய விடயங்கள் முற்றிலும் உண்மை. அதற்காகவே தீர்வாக அரசியல் அமைப்பு மாற்றத்திற்கு சம்மதம் கூறி முயற்சித்தேன். 

கடந்ந 3 ஆண்டுகளாக அதனை நிறைவேற்ற முடியாமல் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்காவே தடையாக இருந்து விட்டார். என உரையாற்இந்தர். 

Radio
×