பாசை­யூர் கடற் பகு­தி­யில் வெளிச்­ச­வீடு- இடிதாங்கியை அமைத்து தர கோரிக்கை!

ஆசிரியர் - Admin
பாசை­யூர் கடற் பகு­தி­யில் வெளிச்­ச­வீடு- இடிதாங்கியை அமைத்து தர கோரிக்கை!

பாசை­யூர் கடற் பகு­தி­யில் இடி தாங்கி, வெளிச்­ச­வீடு அமைத்­துத் தர வேண்டும் என யாழ் மாவட்­டக் கடற்­றொ­ழி­லா­ளர் சம்­மேள­னம் கடற்­றொ­ழில் அமைச்­ச­ருக்கு நேற்று மனு அனுப்­பி­யது.அந்த மனு­வில் தெரி­விக்­கப்­பட்­ட­தா­வது;

யாழ் மாவட்ட மீன­வர்­க­ளில் சிலர் தற்­போது ஆழ்­க­டல் மீன்­பி­டி­யில் ஈடு­பட்டு வரு­கின்­றார்­கள். தற்­போ­துள்ள கடற்­றொ­ழில் திணைக்­க­ளத் தின் சுற்­று­நி­ரு­பத்­தின்­படி 45 அடிக்­கு குறை­வான பட­கு­களை உற்­பத்தி செய்ய முடி­யா­துள்­ளது. எனவே போரி­னால் மிக­வும் பாதிக்­கப்­பட்ட யாழ் மாவட்ட மீன­வர்­கள் கோரு­வது போல 36 அடிக்கு மேற்­பட்ட பட­கு­கள் உற்­பத்தி செய்­வ­தற்கு சிறப்பு அனு­மதி வழங்­க­வும்.

2018 ஆம் ஆண்டு வரவு செல­வுத்­திட்­டத்­தில் 55 நீள­மான பட­கு­க­ளுக்கு 50 வீத மானி­யம் வழங்­கப்­பட்­டது. எனவே மீன­வர்­க­ளுக்கு 36 அடிக்­கு மேற்­பட்ட பட­கு­க­ளுக்கு இந்த மானிய உதவி வழங்­க­ வேண்­டும் குரு­ந­கர் மற்­றும் தீவுப்­ப­கு­தி­யைச் சேர்ந்த மீன­வர்­கள் பாரம்­ப­ரி­ய­மாக சுழி­யோ­டு­வ­தன் மூல­மாக கட­லட்டை, சங்கு என்­ப­ன­வற்றை பிடித்­து­வ­ரு­ கின்­ற­னர்.

தற்­போது வெளி­மா­வட்ட மீன­வர்­கள் செயற்கை வாயுவுடன் சுழி­யோ­டு­வ­தன் மூல­மாக இந்த வளங்­கள் மிக விரை­வாக அழி­வ­டைய வாய்ப்­பு உள்­ளது. யாழ் கட­லேரி பகு­தி­யி­லும் மற்­றும் கிளி­நொச்சி மாவத்­தி­லும் செயற்கை வாயு­வைப் பயன்­ப­டுத்தி சழி­யோ­டு­வதை முற்­றாக நிறுத்த வேண்­டும்­எ­ன­வும் இந்­தப் பகு­தி­யில் பாரம்­ப­ரி­ய­மாக சுழி­யோ­டு­ ப­வர்­க­ளுக்கு அனு­மதி வழங்­க­ வேண்டும் எனவும் கோரு­கின்றோம்.

தொழி­லில் ஈடு­ப­டு­ப­வர்­கள் தடி­க­ளைப் பெறு­வ­தற்கு மிகுந்த சிர­மப்­ப­டு­ கின்­றார்­கள். அவர்­கள் அவற்றை பெறு­வ­தற்கு வன இலாகா திணைக்­க­ளம் மூல­மாக இலகு நடை­மு­றை­கள் ஏற்­ப­டுத்­திக் கொடுக்­கப்­ப­டல் வேண்­டும்.

போர் கார­ண­மாக பல மீன்பி­டி கலங்­கள் பதிவு செய்­யப்­ப­டா­மல் காணப்­ப­டு­கின்­றன. அவற்­றைப் பதிவு செய்­வ­தற்கு உரிய ஒழுங்­கு­களை செய்து தரவேண்­டும்.

எரி­பொ­ருள் விலை­யேற்­றத்­தைத் தொடர்ந்து வழங்­கப்­பட்ட எரி­பொ­ருள் மானிய திட்­டத்­தின் கீழான வலை வளங்­க­ளில் 2013 ஆம் ஆண்டு எரி­பொ­ருள் மானி­யத்தை பெற்­ற­வர்­க­ளுக்கு வலை வழங்­கப்­ப­ட­வில்லை. போர் காரண­மாக படகு பதி­வ­தில் தாம­தம் ஏற்­பட்­டது.

எரி­பொ­ருள் மானி­யம் பதிந்­த­வர்­க­ளுக்கு வலை வழங்­க­ வேண்­டும். பாசை­யூரை அண்­டிய கடல் நீர்­ஏ­ரி­யில் அமைந்­தி­ருந்த வெளிச்­ச­வீ­டும் அத­னோடு அமைந்­தி­ருந்த இடி­தாங்­கி­யும் போர் கார­ண­மாக அழி­வ­டைந்­தது.

இத­னால் பல உயி­ரி­ழப்­புக்­கள் ஏற்­பட்டுள்ளன மிக விரை­வாக வெளிச்ச வீட்­டை­யும் அத­னோடு அமைந்­தி­ருந்த இடி­தாங்­கி­யை­யும் அமைத்­துத் தர வேண்­டும்.­ மீன­வர்­க­ளின் வாழ்­வா­தா­ரத்தை உயர்த்­தும் நோக்­கு­ட­னும் அவர்­க­ளு­டைய பிரச்­சி­னை­களை தீர்த்து வைப்­ப­தி­லும் ஈடு­ப­டும் எம்­மு­டைய சம்­மே­ள­னத்­துக்கு ஓர் அலு­வ­ல­கம் இல்­லா­மல் இருப்­பது பெரும் குறை­யாக உள்­ளது

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு