SuperTopAds

ஒரே கதிரையில் குந்தியிருக்க ஆசைப்படும் உயர் அதிகாரிகள்.. அரசியல் செல்வாக்கு.

ஆசிரியர் - Editor I
ஒரே கதிரையில் குந்தியிருக்க ஆசைப்படும் உயர் அதிகாரிகள்.. அரசியல் செல்வாக்கு.

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் கீழ் உள்ள உயர் பதவிகளில் உள்ள சிலர் மத்திய அரசின் செல்வாக்கின் மூலம் ஓய்வுக் காலத்தின் பின்பும் அதே பதவிக்கு சேவை நீடிப்பு பெற முயற்சிப்பதாக கீழ் நிலை அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

வடக்கு மாகாணத்திற்கு உற்பட்ட அமைச்சுக்கள் , வலயங்களில் உள்ள உயர் பதவியில் இருப்போர் தமது ஓய்வுக் காலத்தின் பின்னரும் சேவை நீடிப்பு பெற்று அதே கதிரையில் அமர்வதற்கு முயற்சிக்கின்றனர்.

இதற்காக ஆளுநர், மத்திய கல்வி அமைச்சு மற்றும் அரசியல்வாதிகளின் செல்வாக்கு என்பவற்றினை திரட்டுகின்றனர். 

இவ்வாறு அவர்களின் பரிந்துரையின் பெயரில் ஒருவருக்கேனும் சேவை நீடிப்பு வழங்கினால் அது தவறான முன் உதாரணமாகவே அமையும் . அது மட்டுமன்றி ஒருவருக்கு சேவை நீடிப்பு 

வழங்கும்போது குறைந்தது ஐவரின் பதவி உயர்வுகள் பாதிக்கப்படும் என்பதனை மறந்த அதிகாரிகள் தமது சுயநலத்திற்காக இந்த சேவை நீடிப்பினை கோருகின்றனர்.

எனவே இவ்வாறு தனிமனித மேம்பாட்டிற்காக பல ஊழியர்களின் எதிர்கால நலனை பாழ் செய்யும் திட்டத்திற்கு வடக்கு மாகாண கல்வி அமைச்சு துணைபோக கூடாது . 

எனத் தெரிவிக்கின்றமை தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது ,

எந்தவொரு அதிகாரியின் சேவை நீடிப்பு எமக்குத் தேவை என இதுவரையில் நாம் சிபார்சு செய்யவில்லை. அவ்வாறு சிபார்சு செய்யும் நடைமுறையும் பின்பற்றப்படுவது கிடையாது. 

எமக்குத் தெரியாமல் அவ்வாறான பணிகள் ஏதும் இடம்பெறுகின்றதா என்பது தொடர்பில் இதுவரை அறிந்திருக்கவில்லை. இருப்பினும் ஒருவருக்கு அவ்வாறு சேவை நீடிப்பு 

வழங்கினால் ஏனையோரும் அதனை முன் உதாரணமாக கொண்டு கோரும் சந்தர்ப்பத்தில் சக ஊழியர்கள் பாதிப்படைவர் என்பது உண்மைதான்.

இதன் அடிப்படையில் அமைச்சு மட்டத்தில் தெளிவாக ஆராய்ந்தே நடவடிக்கை எடுக்கப்படும். அதில் ஒருவர் நலன் சார்ந்த முடிவாக இருப்பதற்கு சாத்தியப்பாடுகள் இருக்காது. எனப் பதிலளித்தார்.