த.தே.கூட்டமைப்பின் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊடகங்களுக்கு எதிராக முறைப்பாடு.

ஆசிரியர் - Editor I
த.தே.கூட்டமைப்பின் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊடகங்களுக்கு எதிராக முறைப்பாடு.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராகிய நான் பணத்திற்கு விலைபோனதாக சக நாடாளுமன்ற உறுப்பினர் அவதூறு பரப்பியுள்ளார் என ஒலிநாடா மற்றும் அச்செய்தியினை வெளியிட்ட நிறுவனங்களின் ஆதாரங்களுடன் குற்றப் புலனாய்வுப் பொலிசாரிடம்  கூட்டமைப்பின் இரு  நாடாளுமன்ற உறுப்பினர்கள்   முறையிட்டுள்ளனர்.

30 கோடி ரூபா பணத்திற்கும் அமைச்சுப் பதவிக்காகவும் மகிந்தவுடன் இணையவுள்ளதாக எனது பெயரை குறிப்பிட்டு ஒலி வழங்கியுள்ளார். அந்த ஒலியை ஓர் ஊடகம் வெளியிட்டுள்ளது. இதனால் குறித்த தகவலினால் எனக்கு வேண்டுமென்றே அப கீர்த்தி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது  எனது சுய கௌரவத்தை பாதிக்கும் செயலாக நான் கருதுகின்றேன்.

எனவே குறித்த விடயம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு நீதியை பெற்றுத்தருமாறு கோருகின்றேன். என குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் சாளிய அபேயசேகரவிற்கு இ.சாள்ஸ் நிர்மலநாதன்  எழுத்தில் முறைப்பாடு செய்துள்ளார். 

இதேநேரம் மற்றுமோர் நாடாளுமன்ற உறுப்பினரான ஈ.சரவணபவான் தனது பெயரையும் தன் சார் நிறுவனத்தையும் அவதூறான வகையில் நிதியை பெற்று பக்கச் சார்பாக நடப்பதாக தெரிவித்ததோடு பணத்திற்காக கட்சி மாறுவதாக கூறப்பட்டமை தொடர்பில் நீதி விசாரணை மேற்கொள்ளுமாறு கோரி கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஓர் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு