யாழில் மோசமடையும் சட்டம் ஒழுங்கு: வேடிக்கை பார்க்கும் அரசு!

ஆசிரியர் - Admin
யாழில் மோசமடையும் சட்டம் ஒழுங்கு: வேடிக்கை பார்க்கும் அரசு!

யாழ்ப்பாணத்தில் சட்டம் ஒழுங்கு மோசமடைந்துவருகின்றது.தென்னிந்திய சினிமா பாணியில் கொலைகள் கொள்ளைகள் சுலபமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்ற போதும் இலங்கை அரசும் அதன் காவல்துறையும் வெறுமனே வேடிக்கை பார்ப்பதையே செய்துவருகின்றது.

இந்நிலையில் சங்கானை பகுதியில் கூரிய ஆயுதங்களுடன் வந்தவர்கள் வயது பாராபட்சமின்றி நித்திரையிலிருந்தவர்களை தாக்கியதுடன் பணம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று அதிகாலை 1.30 அளவில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது .நேற்று அதிகாலையில் முகத்தை முழுமையாக மறைத்துக்கொண்டு 7 முதல் 8 அங்கத்தவர்கள் அடங்கிய குழுவொன்று வீடொன்றின் கதவுகளை உடைத்துக்கொண்டு உள்ளே பிரவேசித்துள்ளனர்.ஆழ்ந்த நித்திரையிலிருந்தவர்களை பொல்லால் தாக்கியதோடு எதிர்த்தவர்களை வாளால் வெட்டியுள்ளனர்.

அனைவரையும் கூரிய ஆயுதங்களால் அச்சுறுத்திய குறித்த குழு 15 பவுன் தங்க ஆபரணங்களையும், ஒரு லட்சம் ரூபா பணத்தினையும் எடுத்துச்சென்றுள்ளனர்.

சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் சங்கானை வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அத்துடன், குறித்த குழுவின் பயன்படுத்தி துவிச்சக்கர வண்டி மற்றும் பாதணிகள் விட்டுச்செல்லப்பட்டுள்ளதாகவும், அவற்றை காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளதோடு முறைப்பாட்டினையும் பதிவு செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட வீட்டுரிமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு