8 வருடங்களின் பின்னர் கரைச்சி பிரதேச சபைக்கு சொந்தமான காணியிலிருந்து படையினர் வெளியேறினர்..
கிளிநொச்சியில் நீண்டகாலமாக இராணுவத்தினரின் பயன் பாட்டில் இருந்த கரைச்சிப்பிரதேச சபையினுடைய பொது நூலகக் காணி நேற்று (02-11-2018) இராணுவத்தினரால் பிரதேசசபை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச சபைக்குச் சொந்தமான பொதுநூலகக் காணி கடந்த 2009ம் ஆண்டு முதல் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்து வந்துள்ளது.
இதனால் கரைச்சிப்பிரதேச சபையின் பொதுநூலகம் கடந்த 2010ம் ஆண்டு முதல் பல்வேறு இடநெருக்கடிகளுக்கு மத்தியில் மாற்றிடத்தில் இயங்கி வருகின்றது.
மேற்படி பொதுநூலகக் காணியை விடுவிக்க வேண்டுமென கரைச்சிப் பிரதேசசபையின் அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது தொடர்பான தீர்மானத்தின் பிரதிகள் படைத்தரப்பு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகரிகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.
கடந்த மாதம் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடலிலும் குறித்த காணி விடயம்தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இதேவேளை இன்றைய தினம் (02-11-2018) குறித்த நூலகக்கட்டடம் மற்றும் காணி என்பன இராணுவத்தினரால் பிரதேச தவிசாளரிடம் உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளனர்.
இதனைப் பொறுப்பேற்றுக் கொண்ட கரைச்சிப் பிரதேச சபை நிர்வாகம் காணிக்கான பெயர் பலகையை நாட்டியுள்ளனர்.