வைத்தியர் இல்லை, துடிதுடித்த சிறுமி, கை கொடுத்த இளைஞர்கள். முல்லையில் அவலம்..
முல்லைத்தீவு மாவட்டம் ஐயன்கன்குளம் பகுதியில் நேற்றைய தினம் கொதி எண்ணை பட்டு காயமடை ந்த சிறுமியை அழைத்துச் சென்ற சமயம் ஐயங்கன்குளம் வைத்தியசாலையில் வைத்தியரும் இல்லை.
நோயாளர் காவு வண்டியும் இல்லாத நிலையில் 10 கிலோ மீற்றர் தூரத்திற்கும் இளைஞர்களின் உதவியுடன் வைத்தியசாலைக்கு கொண்டு சேர்க்கப்பட்டார்.
குறித்த சம்பவத்தில் ஐயங்கன்குளத்தைச் சேர்ந்த வசந்தகுமார்- சாதனா , அகவை 05 , என்னும் சிறுமியே இவ்வாறு பாதிக்கப்பட்டவராவார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவது, தயார் வெளியில். சென்றிருந்த நிலையில்
பேத்தியார் சமையல் அறையில் உணவு தயார் செய்துகொண்டிருந்துள்ளார் அந்த வேளையில் குறித்த சிறுமி அங்கு சென்றதனால் அடுப்பு எரிப்பதற்கு பயன்படுத்திய விறகு தடி தட்டுப்பட்டுள்ளது.
இதன்போது அமைப்பில் இருந்த கொதி எண்ணை சிறிமியின் உடலில் பட்டுள்ளது. இதனையடுத்து ஓர் மோட்டார் சைக்கிளின் உதவியுடன் ஐயங்கன்குளம் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இருப்பினும் அங்கே வைத்தியர் எவரும் இல்லை எனப் பதிலளிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறானால் சிறுமியை அனுமதித்து நோயாளர் காவு வண்டியில் மல்லாவி வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யுமாறு கோரியுள்ளனர்.
அதன்போது ஞாயிற்றுக் கிழமைகளில் சாரதி விடுமுறை என்பதனால் காவு வண்டியை மல்லாவி வைத்தியசாலையிலேயே நிறுத்தி விட்டுச் செல்வதாக பதிலளித்துள்ளனர்.
இதனால் குறித்த சிறுமியை ஓர் மோட்டார் சைக்கிளின் உதவியுடன் மல்லாவி வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முற்பட்டனர்.
இதன்போது இடையில் உள்ள காட்டுப் பிரதேசத்தில் பாதையோரம் யானைகளின் நடமாட்டம் காணப்பட்டுள்ளது.
இதனால் மீண்டும் ஐயங்கன்குளம் பகுதிக்கு சென்றுள்ளனர்.
குறித்த சம்பவத்தினையடுத்து கிராம இளைஞர்கள் பலர் ஒன்றினைந்து 6 மோட்டார் சைக்கிள்களில் மீண்டும் மல்லாவி வைத்தியசாலைக்கு சிறுமியை கொண்டு சென்று வைத்தியசாலையில் அனுமதிக்கும் அவலம் ஏற்பட்டது.