SuperTopAds

"எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம்" என்பதுபோல் பாரிய பிரச்சினைக்கு மத்தியில் ஆசன சண்டை..

ஆசிரியர் - Editor I

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போனஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ரெலோவிடம் வழங்குமாறுகோரும் விடயம் தொடர்பில் நேற்று முன்தினம் மாலையில் கொழும்பில் கூடி ஆராய்ந்தனர்.

நாட்டின் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்காவை பதவி விலக்கி புதிய பிரதமராக மகிந்த ராயபக்‌ஷ  இரவு வேளையில் நியமிக்கப்பட்டார். 

இவ்வாறு மகிந்தவிற்கான பதவிப் பிரமானம் இடம்பெற்றுக்கொண்டிருந்த சமயம் கூட்டமைப்பின் ஓர் கூட்டமும் கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

அவ்வாறு கூட்டமைப்பின் சார்பில் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் ஆராய்ந்தபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஓர் கட்சியான ரெலோ 

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட்டமைப்பிற்கு கிடைத்த இரு வெகுமதி ஆசனங்களில் ஒன்றை ரெலோவிற்கு வழங்க வேண்டும். என்று ரெலோ அடம் பிடிப்பது தொடர்மிலேயே ஆராய்ந்துள்ளனர்.

அதன்போது தமது கட்சியின் மத்தியகுழு அரசியல் குழுக்களின் தீர்மானத்தின் பிரகாரம் குறித்த ஆசனத்திற்கான பதிலினை எதிர்வரும் 31ம் திகதிக்கு முன்பு சாதகமான பதில் வழங்க வேண்டும். என ரெலோவினர் கோரியுள்ளனர்.

குறித்த சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் , தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராயா மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருடன் ரெலோவின் சார்பில் செல்வம் அடைக்கலநாதனும்

 புளட் அமைப்பின் சார்பில் த.சித்தார்த்தனும் கலந்துகொண்டிருந்தனர். குறித்த பேச்சுக்களின்போது இடம்பெற்ற பேச்சுக்களில் ஆரம்பம் முதல் இறுதிவரை மௌனம் காத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.