அரச வாகனத்தை தொடர்ந்தும் வைத்திருக்கிறாராம் சீ.வி.விக்னேஷ்வரன்..
வடக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் 24ம் திகதி முடிவடைந்த நிலையிலும் சபையின் வாகனத்தை மீளவும் கையளிக்காது தனது சொந்தப் பாவனையில் முதலமைச்சர் ஈடுபடுத்துவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
வடக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் 25ம் திகதி நள்ளிரவுடன் முடிவடைந்த்து. இந்த நிலையில் வடக்கு மாகாண சபையில் அங்கம் வகித்த ஐந்து மாகாண அமைச்சர்களில் நால்வர்
உத்தியோக பூர்வமாக மீளக் கையளித்து விட்டதாக அமைச்சின் செயலாளர்கள் உறுதிப்படுத்தியபோதும் முதலமைச்சரின் அமைச்சின் செயலாளர் மட்டும் குறித்த விடயம் தொடர்பில் விபரம் தெரிவிக்க மறுத்து விட்டார்.
அதாவது முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சரான சி.வி.விக்னேஸ்வரன் தனது பாவனையில் இருந்த வாகனத்தை ஒப்படைத்தாரா என நேற்று முன்தினம் மாலையில் செயலாளரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அலுவலக நேரத்தில் தொடர்புகொள்ளுமாறு கூறினார்.
இதன் பிரகாரம் நேற்றைய தினம் அலுவலக நேரத்தில் தொடர்பு கொண்டு கேட்டபோது குறித்த விடயம் தொடர்பில் பிரதம செயலாளரிடம் கேட்குமாறு கூறியபோது
ஏனைய அமைச்சுக்களின் செயலாளர்களே பதிலளித்ததனை கூறியபோதும் பிரதம செயலாளரே பொறுப்பானவர் என்ற வகையில் பிரதம செயலாளரிடமே கேட்குமாறு கூறி தொலைபே அழைப்பைத் துண்டித்தார்.
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்தபோது தனது பாவனை வாகனத்தை இதுவரை மீளக் கையளிக்கப்படவில்லை. என்றே கண்டறியப்படுகின்றது.