யாழ் ஊடக மையத்தின் ஏற்பாட்டில், மூத்த ஊடகவியலாளரான எஸ்.எம். ஜீ க்கு நினைவஞ்சலிக்கூட்டம்!

ஆசிரியர் - Admin
யாழ் ஊடக மையத்தின் ஏற்பாட்டில், மூத்த ஊடகவியலாளரான எஸ்.எம். ஜீ க்கு நினைவஞ்சலிக்கூட்டம்!

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள, யாழ் ஊடக மையத்தின் ஏற்பாட்டில், மூத்த ஊடகவியலாளரான எஸ்.எம்.கோபாலரட்ணம் அவர்களின் நினைவஞ்சலிக்கூட்டமானது,நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 அளவில் யாழ்ப்பாணத்தின் நாச்சிமார் கோவிலடி சரஸ்வதி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்த நினைவஞ்சலிக்கூட்டத்தில், ஈழத்தின் மூத்த ஊடகவியலாளர்களான, க.கானமயில்நாதன், அ.பெருமாள், எஸ்.யோகரட்ணம்(இராதேயன்),வீ.தேவராஜா,பசீர் காக்கா ஆகியோருடன் யாழ்ப்பாண நாளிதழ்களின் ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொள்ளவுள்ளதோடு, பொது மக்களுக்கும் யாழ் ஊடக மையமானது அழைப்பு விடுத்துள்ளது.

எஸ்.எம். ஜீ என்று செல்லமாக எல்லோராலும் அழைக்கப்படுபவரும் இலங்கைத் தமிழ் ஊடகத்துறையின் விருட்சமெனப் புகழப்படுபவருமான ஊடகவியலாளர் எஸ்.எம். கோபாலரத்தினம், மட்டக்களப்பில் தனது 87வது வயதில், கடந்த நவம்பர் மாதம் 15ம் திகதி காலமானார்.

இலங்கையின் வீரகேரியில் தொடங்கி, ஈழநாடு, ஈழமுரசு, காலைக்கதிர், செய்திக்கதிர், ஈழநாதம், தினக்கதிர், சுடரொளி ஆகிய பத்திரிகைகளில் எஸ்.எம். ஜீ பணியாற்றியதோடு,2002ஆம், 2004ஆம் ஆண்டுகளில் ஜேர்மனி, பிரான்ஸ், லண்டன் முதலிய ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று, அங்கு எழுத்தாளர் சங்கங்களின் வரவேற்புக்களையும் பெற்றுள்மை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு