விரக்தியினால் உயிரை மாய்க்க முயன்ற கைதி, காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி..

ஆசிரியர் - Editor I
விரக்தியினால் உயிரை மாய்க்க முயன்ற கைதி, காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி..

யாழ்.சிறைச்சாலையில் விளக்கமறியல் கைதியொருவர் தவறான முடிவெடுத்து , உயிரை மாய்க்க முற்பட்ட வேளை சிறைச்சாலை உத்தியோகஸ்தர்களால் காப்பாற்றப்பட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார், 

யாழ்.உரும்பிராய் பகுதியை சேர்ந்த இராஜேஸ்வரன் கஜன் (வயது 23) உயிரை மாய்க்க முற்பட்ட வேளை சிறைச்சாலை உத்தியோகஸ்தர்களால் காப்பற்றப்பட்டு உள்ளார். 

குறித்த சம்பவம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்று உள்ளது. அது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

குறித்த நபர் திருட்டு சம்பவம் ஒன்றுடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் பொலிசாரால் கைது செய்யபட்டு யாழ்.நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளார். 

விளக்கமறியலில் உள்ள தன்னை உறவினர்கள் எவரும் பார்க்க வருவதில்லை எனும் மன விரக்தியில் குறித்த நபர் காணப்பட்டார் எனவும் அதனாலயே தவறான முடிவெடுத்து உயிரை மாய்க்க முற்பட்டு உள்ளார் எனவும் சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு