கட்சியின் தீர்மானங்களில் கடும் அதிருப்தி, தனிப்பட்ட நலன்களுக்காக தீர்மானங்கள் எடுக்கப்படுகிறது - மாவை..

ஆசிரியர் - Editor I
கட்சியின் தீர்மானங்களில் கடும் அதிருப்தி, தனிப்பட்ட நலன்களுக்காக தீர்மானங்கள் எடுக்கப்படுகிறது - மாவை..

பாராளுமன்றத் தேர்தலில் கட்சியினால் எடுக்கப்பட்ட முடிவுகள் சம்பந்தமாக கடுமையான அதிருப்திகள் தனக்கு உள்ளதாக அவை நேரில் சந்தித்த சிவஞானம் சிறிதரனிடத்தில் மாவை.சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

மாவை.சேனாதிராஜா கட்சியின் தலைமைப்பதவியில் இருந்து விலகுவதாக எழுத்து மூலமான அறிவிப்பை சிவஞானம் சிறிதரனுக்கு அனுப்பி வைத்துள்ளதோடு அதன் பிரதியை கட்சியின் பொதுச்செயலாளர் வைத்தியர். ப. சத்தியலிங்கத்திற்கும் அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், மாவை.சேனாதிராஜாவின் மாவிட்ட புரத்தில் உள்ள இல்லத்துக்கு நேற்று முன்தினம் திங்கட்கிழமை சிவஞானம் சிறிரதன் நேரில் சென்று அவருடன் உரையாடியுள்ளார். இராஜினாமாக் கடிதம் பற்றிய விடயம் சம்பந்தமாக முதலில் உரையாடப்பட்டது. 

இதன்போது, சிறிதரன், இராஜினாமாக் கடிதத்தினை மீளப்பெற்று தொடர்ந்தும் தலைப்பதவியில் நீடித்து செயற்பட வேண்டும் என்று கோரியுள்ளார். எனினும், மாவை.சோ.சேனாதிராஜா, தான் தலைவர் பதவியில் இருந்தபோதும், 

கட்சியின் சில முடிவுகள் தனிப்பட்ட நலன்களை அடிப்படையாகவைத்து, தனது கரிசனைகள் கோரப்படாது ஒரு சிலரால் முன்னகர்த்தப்பட்டுச் செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவ்விதமாக தொடரும் நிலைமைகள் தனக்கு பாரிய அதிருப்தியையும், 

சங்கடத்தினையும் தோற்றுவிப்பதாக உள்ளது. ஆகவே தான் கட்சியின் தலைமைப்பதவியில் இருந்து விலகும் தீர்மானத்தினை எடுத்தேன் என்று கூறியுள்ளார். அதுமட்டுமன்றி, கட்சியின் தலைமைக்கு நீங்கள் (சிறிதரன்) தெரிவு செய்யப்பட்டதன் பின்னரும் 

அந்தப்பதவியில் தொடர்ந்தும் நான் இருப்பது பொருத்தமற்றதொரு விடயமாகும். ஆகவே நீதிமன்ற விடயத்தினை முடிவுக்கு கொண்டுவந்து கட்சியின் தலைமையைப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் சேனாதிராஜா கோரியுள்ளார்.

அதன்பின்னர் சேனாதிராஜாவின் முடிவினை மாற்றுமாறும், பதவி விலகல் கடிதத்தினை மீளப்பெற்றுக்கொள்ளுமாறும் சிறிதரன் வலியுறுத்தியுள்ளார், எனினும் சேனாதிராஜா அதற்கு இணக்கத்தினை வெளியிடவில்லை. 

அதேநேரம், நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் செயற்பாடுகளில் தனது பங்களிப்பை கட்சியின் அங்கத்தவராக வழங்குவேன் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழ் மக்களின் விடுதலைக்கான பயணத்தில் தனது பங்களிப்பு தொடர்ந்தும் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு