SuperTopAds

23 ஆயிரம் ஏக்கா் நிலத்தை இராணுவம் விடுவித்துள்ளதா..? எங்கே இராணுவம் விடுவித்த 2 ஆயிரம் ஏக்கா் நிலத்தையாவது காண்பியுங்கள் பாா்க்கலாம்..

ஆசிரியர் - Editor I
23 ஆயிரம் ஏக்கா் நிலத்தை இராணுவம் விடுவித்துள்ளதா..? எங்கே இராணுவம் விடுவித்த 2 ஆயிரம் ஏக்கா் நிலத்தையாவது காண்பியுங்கள் பாா்க்கலாம்..

கிளிநொச்சி மாவட்டத்தில் 23 ஆயிரம் ஏக்கா் மக்களின் நிலத்தை விடுவித்துள்ளதாக இராணுவம் அப்பட்டமான பொய்யை கூறும் இராணுவம் 23 ஆயிரம் ஏக்கா் நிலத்தில் 2 ஆயிரம் ஏக்கா் நிலத்தையாவது காண்பிக்க முடியு மா? என நாடாளுமன்ற உறுப்பினா் சி.சிறீதரன் கேள்வி எழுப்பியுள்ளாா். 

மாவட்டத்தில் படையினர், வனவளத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், தொல்லியல் திணைக்களங்களின் பிடியில் உள்ள அரச மற்றும் தனியார் நிலங்களை விடுவிப்பதற்காக ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஆளுநர் தலமையில் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கே நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் விபரம் தெரிவிக்கையில் ,

கிளிநொச்சி மாவட்டத்தில் போரின் பின்னர் சில நூறு ஏக்கரை விடுவித்த படையினா் ஏக்கர் நிலம் விடுவித்ததாக கூறுகின்றனர் அவ்வாறு விடுவித்திருந்தால் எந்தப் பிரதேச செயலாளர் பிரிவின் எந்த கிராம சேவகர் பகுதிகளில் விடுவித்தீர்கள். 

அதனை எத்தனை குடும்பத்திடம் கையளித்தீர்கள் இதில் ஏதாவது தரவு உண்டா. மக்களின் பயன் பாட்டுக் காணிகளையும் பயன் தரும் நிலத்தையும் கோரினால் அவைகள் எவையுமே விடப்படவில்லை.  அவ்வாறானால் எங்கே இவற்றை விடுவித்தீர்கள் விடுவித்த நிலத்தை யாரிடம் கொடுத்தீர்கள். 

இவை தொடர்பான தகவல்கள் ஏதும் மாவட்டச் செயலகத்தில் உண்டா. என அடுக்கடுக்கான கேள்விகளை தொடுத்தார். இதேநேரம் படையினர் கூறும் படை முகாம் தொடர்பில் மட்டுமே மாவட்டச் செயலக அதிகாரிகள் விபரம் தெரிவிக்கின்றீர்கள் . 

இதில் பல படை முகாம்கள் தொடர்பான தரவுகள் மறைக்கப்பட்டுள்ளன. அவ்வாறானால் அவை தொடர்பில் ஏன் உரிய தரவுகளை மாவட்டச் செயலகம் திரட்டவில்லை. அந்த முகாம்கள் உள்ள நிலத்தின் மக்கள் தொடர்ந்தும் தமது நிலத்தை கோருகின்றனரே. என்றார். 

இதன்போது படையினர் தரப்பில் தம்மால் விடுவித்த 23 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் 21 ஆயிரம் ஏக்கர் நிலம் பூநகரிப் பிரதேசத்தில் காட்டை அண்டிய பகுதிகளில் விடுவித்ததாக பதிலளித்ததோடு மாவட்டச் செயலக அதிகாரிகள் தம்மிடம் சில படை முகாம்கள் தொடர்பான தரவுகளே உள்ளன.

எஞ்சியவை படையினர் வழங்கவில்லை. அவ்வாறான படை முகாம்களின் முன்னாள் சென்று படம் எடுத்து எம்மால் எவ்வாறு தரவுகளை சேகரிப்பது எனக் கூறினர். இதன்போது மீண்டும் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மிகவும் கோபாவேசமாக படையினர் பூநகரிப் பிரதேசத்தில் 21 ஆயிரம் ஏக்கர் நிலத்தை விடுவித்ததாக கூறுவது பச்சப்பொய். 

அதேநேரம் பூநகரியில் மக்களின் நிலங்கள் எவ்வளவோ படையினர் வசம் உள்ள நிலையில் அதனை விடுவிக்குமாறு மக்கள் கோரிக்கை விடும் நிலையில் அவற்றிற்கு தீர்வில்லை. ஆனால் காட்டை விடுவித்து வனவளத் திணைக்களத்திடமா கையளித்தீர்கள். அங்கும் அவ்வளவு இடம் விடுவிக்கப்பட்டதா.

இதேநேரம் மாவட்ட அதிகாரிகள் முழுமையான தரவுகளை திரட்ட வேண்டும். அவ்வாறு தரவுகள் இல்லையெனில் அதனை பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும். என்ற நிலையில் பெரும் அமளி உருவானது.