புறக்கணிக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள்..

ஆசிரியர் - Editor I
புறக்கணிக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள்..

ஐக்கிய அமெரிக்காவின் நிதியனுசரனையில் ஐ.டபிள்யூ. பி.ஆர் அமைப்பினூடாக புலனாய்வு அறிக்கையிடல் தொடர்பான பயிற்சி பட்டறையின் விருது வழங்கும் நிகழ்வில் வடக்கு கிழக்கு தமிழ் ஊடகவியலாளர்கள் முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளனர்

கடந்த 2016ம் ஆண்டு இலங்கையின் அனைத்து மாகாண ங்களில் இருந்தும் தொழில் சார்ந்த ஊடகவியலாளர்கள் அமைப்பு உருவாக்கப்பட்டு அதில் இருந்து தொழில் சார்ந்த ஊடகவியலாளர்கள்  சம்மேளனம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது

இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட அமைப்பினால்ஐக்கிய அமெரிக்காவின் நிதியனுசரனையில் ஐ.டபிள்யூ. பி.ஆர் அமைப்பினூடாக புலனாய்வு அறிக்கையிடல் தொடர்பான பயிற்சி பட்டறை தொடர்ச்சியாக கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்ற துடன் இதில் பங்கு பற்றியவர்கள்

இறுதியில் வெளியிடப்பட்ட அறிக்கைகளுக்கான விருது கள் வழங்கு் நிகழ்வு இன்று (26.10.2018). கொழும்பு பண்டார நாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

இதில் மேற்படி பயிற்சி பட்டறையில் இரண்டு வருடங்கள் பங்குபற்றி அறிக்கைகளை எழுதி வெளியீடு செய்த வடக்கு கிழக்கை சேர்ந்த  சேர்ந்த தமிழ் ஊடாக வியலாளர்கள் விருது வழங்கும் நிகழ்வுக்கு இன்று அழைக்கப்ட்டிருந்தனர்

இந்த விருது வழங்கும் நிகழ்வில் வடக்கு. கிழக்கைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளனர்

இவ்வாறு கடந்த யுத்த காலத்தில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் களை திரட்டி அவர்களின் திறன் விருத்தியை மேம்படுத்துவதாக நிதியினை பெற்று வடக்கு கிழக்கை சஊடகவியலாளர் கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்

இன்று பிற்பகல் கொழும்பு பண்டார நாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி அவர்கள் கலந்து கொண்ட நிகழ்விலேயே வடக்கு. கிழக்கைச் சேர்ந்த தமிழ் ஊடகவியலாளர்கள் முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு