கட்சியிலிருந்து விலகிவிட்டு அதே கட்சியால் கிடைத்த பதவியை காவிக்கொண்டு திரிய அனந்திக்கு வெட்கம் இல்லையா..?

ஆசிரியர் - Editor I
கட்சியிலிருந்து விலகிவிட்டு அதே கட்சியால் கிடைத்த பதவியை காவிக்கொண்டு திரிய அனந்திக்கு வெட்கம் இல்லையா..?

வடமாகாணசபை அமைச்சர் அனந்தி சசிதரன் தமிழரசு கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து அதனை கட்சி ஏற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அனந்தி மாகாணசபையின் இறுதி அமர்வில் கலந்து கொண்டமை குறித்து எதற்காக கேள்வி எழுப்பவில்லை. என ஆழுங்கட்சி உறுப்பினர்கள் அவைத்தலைவரை கேள்விக்குட்படுத்தினர். 

அமைச்சர் என கூறப்படும் திருமதி அனந்தி சசிதரன் புதிய கட்சி ஒன்றை உருவாக்கியுள்ளதுடன், தன்னுடைய சுய விருப்பத்தின் பெயரில் தான் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய தமிழரசு கட்சியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தினை கட்சியின் செயலாளருக்கு அனுப்பியிருந்தார். 

இதனை கட்சி அங்கீகரித்துள்ளதுடன், திருமதி அனந்தி சசிதரன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக வடமாகா ணசபைக்கு எழுத்துமூல அறிவித்தலையும் வழங்கியிருந்தது. அந்த அறிவித்தல் இன்றைய தினம் சபையில் அவை த் தலைவர் சீ.வி.கே.சிவஞானத்தினால் வாசித்து காண்பிக்கப்பட்டது. 

எனினும் அது கட்சிசார்ந்த விடயம் ஆகவே அதனை எதற்காக சபையில் கூறவேண்டும் என மாகாணசபை உறுப்பி னர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் கல்வி அமைச்சர் என கூறப்படும் க.சர்வேஸ்வரன் ஆகியோர் வாதிட்டனர். இத ன்போது எழுந்த மாகாணசபை உறுப்பினர்களான கே.சயந்தன், ஆ.பரங்சோதி மற்றும் அயூப் அஸ்மின் ஆகியோர்.

அனந்தி சசிதரன் தான் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியடைந்த கட்சியிலிருந்து நீங்குவதாக அறிவித்துள்ளார். அதனை கட்சி ஏற்றுக் கொண்டுள்ளதுடன், சபைக்கும் அறிவித்துள்ளது. இதன்படி அனந்தி சசிதரன் தனது உறுப் பினர் பதவியையும் இழக்கின்றார். 

அதனை அவை தலைவர் ஏன் கேள்வி கேட்கவில்லை? என கேட்டதுடன், சபைக்குள் வருவதற்கு கூச்சம் இல்லையா எனவும் கேள்வி எழுப்பினர். ஆயினும் அனந்தி சசிதரன் அமைதியாக இருந்ததுடன், பதவி ஆசை யில் புதிய கட்சிகளை சிலர் தொடக்குகிறார்கள் என கூறியபோதும் அனந்தி அமைதியாக இருந்தார்.  

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு