கோலி, ரோகித் சர்மா புதிய சாதனை

ஆசிரியர் - Admin
கோலி, ரோகித் சர்மா புதிய சாதனை

வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக நேற்றைய ஒருநாள் போட்டியில் ரோகித்சர்மாவும்  விராட்கோலியும் இணைந்து 2-வது விக்கெட்டுக்கு 246 ரன் எடுத்தனர். சேசிங்கில் இந்திய ஜோடி எடுத்த அதிக ரன் இதுவாகும். இதன் முலம் இருவரும் புதிய சாதனை படைத்தனர்.

இதற்கு முன்பு 2009-ம் ஆண்டு கோலி- காம்பீர் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு சேசிங்கில் 224 ரன் எடுத்ததே சாதனையாக இருந்தது. காம்பீருடன் படைத்த சாதனையை கோலி தற்போது ரோகித்துடன் இணைந்து முறியடித்துள்ளார்.

ஒட்டு மொத்த அணிகளில் சேசிங்கில் 5-வது சிறந்த ரன் இதுவாகும். ஜெயசூர்யாவும்  உபுல் தரங்கவும் 2006-ம் ஆண்டு 2-வது விக்கெட்டுக்கு இங்கிலாந்து எதிராக (2006) 286 ரன் எடுத்ததே சேசிங்கில் எடுக்கப்பட்ட அதிக ரன் ஆகும்.

Radio
×