இராணுவம் அப்படி செய்வதில்லை, பதவி ஆசையால் உண்மையை மறைக்கும் அங்கஜன்..

ஆசிரியர் - Editor I
இராணுவம் அப்படி செய்வதில்லை, பதவி ஆசையால் உண்மையை மறைக்கும் அங்கஜன்..

யாழ்.வலி வடக்கில் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் மக்களின்  காணிகளில் இராணுவம் உற்பத்தி செய்யும் விவசாய பொருட்களை பொது மக்களுக்கு விற்பனை செய்வதில்லை என்று விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் உறுதிபட தெரிவித்தார். 

ஏற்றுக் கொள்ளவே முடியாத இவ்வாறான விற்பனை நடவடிக்கையில் ஈடுபடுவது தொடர்பில் ஆதார பூர்வமாக தெரிவித்தால் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுப்பேன் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். 

யாழ்.கோவில் வீதியிலுள்ள அமைச்சரின் வீட்டில் நேற்று மாலை ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. 

இதன் போது அங்கிருந்த ஊடகவியலாளர்கள் வலி.வடக்கில் இராணுவம் கையகப்படுத்தி வைத்துள்ள காணிகளில் பெருமளவான விவசாய நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். 

இவ் விவசாய உற்ப்பத்திகள் நேரடியாக யாழில் உள்ள பொது சந்தைகளில் விற்பனை செய்யப்படுகின்றது. விவசாயிகள் நிர்னைத்த விலைகளுக்கு குறைவாக விற்பனை செய்து வருகின்றனர். இதனால் விவசாயிகள் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர். 

இவ்விடையம் தொடர்பில் ஏதும் நடவடிக்கை எடுக்கப்படுமா? என கேள்வி எழுப்பினார். 

இதற்க்கு பதிலளிக்கும் போதே அவர் மேற் கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- 

படையினர் வசமிருக்கின்ற காணிகளில் விவசாய பண்ணை நடத்தப்படுகிறது. அதில் எங்கள் மக்கள் தான் வேலை செய்கின்றனர். அங்கு செய்யப்படுகிகின்ற விவசாய உற்பத்திப் பொருட்களை குறிப்பாக மரக்கறி வகைகளை இங்குள்ள சந்தைகளில் விற்பதில்லை. அவர்கள் தங்கள் தேவைகளுக்காகவே அதனைப் பயன்படுத்துகின்றனர். 

ஆனாலும் இரானுவத்தினரால் உள்ளுர் வியாபாரிகள் பாதிக்கப்படுவது தொடர்பில் வடக்கு மாகாண சபையில் இருந்த போதே நான் பேசியிருக்கின்றேன். அத்தோடு விவசாய அமைச்சரையும் சந்தித்து அண்மையில் பேசியிருக்கின்றேன்.

மேலும் படையின் மேற்கொள்ளும் விவசாயத்தையும் பார்த்திருக்கின்றேன்.

ஆனால் அவர்கள் செய்கின்ற உற்பத்திகள் இங்குள்ள சந்தைகளுக்கு வரப் போறதில்லை. அத்தோடு அவர்கள் தொடர்ந்தும் அந்த உற்பத்திகளைச் செய்ய முடியாது. ஏனெனில் மக்களின் காணிகள் மக்களிடமே கையளிக்கப்பட வேண்டுமென ஐனாதிபதி கூறியிருக்கின்றார். 

அதற்கமைய காணிகளும் விடுவிக்கப்பட இருக்கின்றது. அது வரையில் அந்தக் காணிகளில் அவர்கள் விவசாயம் செய்தாலும் பரவாயில்லை. ஏனெனில் மக்களிடம் அக் காணிகள் 

கையளிக்கப்படும் போது அந்தக் காணிகள் வளப்படுத்திய காணிகளாக விவசாயத்திற்கு உகந்ததாக இருக்கும். ஆகவே இதன் பயன் மக்களையே சென்றடைய இருக்கின்றது.

இதே வேளை மருதனார்மடம் மற்றும் திருநெல்வேலி சந்தைகளில் இரானுவத்தினரின் வாகனங்களில் இரானுவச் சீருடையடன் வந்தே இரானுவத்தினர் மரக்கறிகளை விற்பனை 

செய்வதாக ஊடகவியியலாளர்கள் தெரிவித்த போது அதனை மறுதலித்த அங்கஐன் இராமநாதன் இதற்கான ஆதாரம் இருந்தால் உடனடியாக அதனைத் தான் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார். 

இச் சந்திப்பின் முடிவில் இந்த விடயம் தொடர்பில் மாவட்ட இரானுவத்தளிபதியுடனும் தொலைபேசியில் உரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு