அங்குராப்பண நிகழ்விலேயே சோபிக்காத அனந்தியின் கட்சி, அரசியலில் சோபிக்குமா?

ஆசிரியர் - Editor I
அங்குராப்பண நிகழ்விலேயே சோபிக்காத அனந்தியின் கட்சி, அரசியலில் சோபிக்குமா?

அனந்தி சசிதரனின் புதிய கட்சி அங்குரார்ப்பண நிகழ்வில் பிரமுகர்கள் மற்றும் மக்கள் வரவு குறைந்த அளவிலேயே கலந்து கொண்டதை காண முடிந்தது.

இன்று(21) புதிதாக ஆரம்பிக்கப்பட்ட  இக் கட்சியின் செயலாளர் நாயகமாக அனந்தி சசிதரன் செயற்பட உள்ள நிலையில மதத்தலைவர்களின் ஆசியுரையுடன் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

எனினும்  பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் குறித்த கட்சியின் ஆரம்ப   நிகழ்விற்கு பெருமளவானவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. 

எனினும் குறைந்தளவானவர்களே நிகழ்விற்கு வருகை தந்திருந்தமை மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினராக கடந்த  வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு அனந்தி சசிதரன் வடக்கு மாகாண முதலமைச்சருக்கு அடுத்த படியாக அதிக வாக்குகளாக 87, 212 வாக்குகளைப் பெற்றிருந்தார்.

அந்த கட்சியின் உறுப்பினராக செயற்பட்ட காலத்தில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதால் ஒழுக்காற்று நடவடிக்கையை கட்சி எடுத்திருந்த நிலையில் கட்சியிலிருந்து விலகியே செயற்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் மாகாண சபையில் முதல்வருக்கு எதிராக தமிழரசுக் கட்சியினர் செயற்பட்ட போது முதல்வருக்கு ஆதரவாக நின்றிருந்தார்.

இதனால் முதலமைச்சரின் புதிய அமைச்சரவையில் மகளிர் விவகார அமைச்சராக அவரும் நியமிக்கப்பட்டிருந்தார்.

இவ்வாறான நிலையில் மாகாண சபையில் முதல்வர் அணி முதல்வருக்கு எதிரான அணி என இரு அணிகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களே பிரிந்து நின்று செயற்பட்டனர்.

இதனையடுத்து அடுத்த மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தனிக்கட்சி ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு