யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை, 2 வருடங்கள் கடந்தும் கிடைக்காத நீதி..

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை, 2 வருடங்கள் கடந்தும் கிடைக்காத நீதி..

பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்.பல்கலைகழக மாணவர்களால் நினைவு கூறப்பட்டது. 

யாழ்.பல்கலைகழக மாணவர்களான நடராஜா கஜன் மற்றும் விஜயகுமார் சுலக்சன் ஆகிய இரு மாணவர்களும் கடந்த 2016ஆம் ஆண்டு நள்ளிரவு வேளை காங்கேசன்துறை வீதி ஊடாக 

மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டு இருந்த வேளை கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அருகில் நின்ற பொலிசார் மாணவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் மாணவர்கள் உயிரிழந்து இருந்தனர். 

படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு நீதி கோரி யாழ் [பல்கலைகழக மாணவர்கள் போராட்டம் நடத்திய போது , மாணவர்களை அழைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா சந்தித்து , 

குறித்த படுகொலை சம்பவம் தொடர்பில் விரைவான விசாரணைகள் நடத்தப்பட்டு ஆறு மாத காலத்திற்குள் குற்றப்பகிர்வு பத்திரம்  யாழ்.மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்படும்  என உறுதி அளித்திருந்தார். 

ஆனால் தற்போது இரண்டு வருடங்களை கடந்த நிலையிலும் இதுவரை சட்டமா அதிபர் திணைக்களத்தால் குற்றபகிர்வு பத்திரம் தாக்கல் செய்யப்படவில்லை. 

அதேவேளை குறித்த படுகொலை சம்பவம் தொடர்பில் ஐந்து பொலிசார் மீது குற்றம் சுமத்தப்பட்டு யாழ்.நீதிவான் நீதிமன்றில் சுருக்க முறையற்ற விசாரணைகள் நடைபெற்று வந்தது. 

அந்நிலையில் தற்போது ஐந்து பொலிசாரில் மூன்று பொலிசார் வழக்கில் இருந்து முற்றாக நீக்கபப்ட்டு அரச தரப்பு சாட்சியமாக மாற்றப்பட்டு உள்ளனர். ஏனைய இருவருக்கும் எதிராகவே குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு