பட்டதாரிகளான முன்னாள் போராளிகளுக்கு அரச வேலைவாய்ப்பு..

ஆசிரியர் - Editor
பட்டதாரிகளான முன்னாள் போராளிகளுக்கு அரச வேலைவாய்ப்பு..

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட பட்டதாரிகளை அரச வேலைகளுக்குள் உள்ளீர்க்கும் நோக்குடன் அவர்களின் பெயர் விபரங்கள் பிரதேச செயலகங்களால் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்களுக்கு அரச வேலை வழங்குவது தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைவாகவே விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

புனர்வாழ்வு அமைச்சின் செயலாளர் ஜே. பிரமிளஸ் கொஸ்தா கடந்த 08 ஆம் திகதி கடிதமொன்றை யாழ்மாவட்ட செயலருக்கு அனுப்பி வைத்திருந்தார்.

அதன் பிரகாரம் மாவட்ட செயலரால் பிரதேச செயலர்களுக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டு விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட பட்டதாரிகள் பெயர், முகவரி, அடையாள அட்டை இலக்கம் , புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட திகதி என்பவற்றை பிரதேச செயலகங்களில் பதிவு செய்யுமாறு  கோரப்பட்டுள்ளனர்.

Radio
×